Wednesday, December 25, 2024
Homecinemaமுதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி - விபரம் உள்ளே !

முதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி – விபரம் உள்ளே !

மாரி 2 வில் நடித்து வெகு ஜன ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து கொண்டே இருக்கிறது. தமிழ் நடிகையான இவர் ப்ரேமம் என்ற மலையாள படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

பிரமாண்டமாக பேசப்பட்ட இப்படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு வெளிவந்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலின் மூலம் சிறுவர் சிறுமிகளிடத்திலும் இவர் மிக பிரபலம் அடைந்துள்ளார். வித்தியாசமான நடிப்புத்திறன் மற்றும் சிரிப்பழகால் தமிழ் ரசிகர்களை கட்டி வைத்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் முதன் முறையாக பாகுபலி நடிகரான நடிகர் ராணாவுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். விரட்ட பர்வம் 1992 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இதில் ஏழை விவசாயி மகளாக சாய்பல்லவி நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அவர் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments