Tuesday, December 24, 2024
Homecinemaஎனக்கு அது செட்டாகவில்லை. மேடையில் கதறி அழுத நடிகை . என்ன நடந்தது தெரியுமா? விளக்கம்...

எனக்கு அது செட்டாகவில்லை. மேடையில் கதறி அழுத நடிகை . என்ன நடந்தது தெரியுமா? விளக்கம் உள்ளே !

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளிவந்த படம் கனா. அந்த படத்தில் நாயகனாக நடித்த தர்ஷனுடன் ஜோடி சேர இருப்பவர்
பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி. தும்பா என்ற படத்தை ஹரிஸ்ராம் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டு பகுதியில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது.

keerthi pandiyan crying

இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் மேடையில் பேசும்போது, எனக்கு எத்தனையோ கதைகள் சொன்னார்கள். ஆனால் எனக்கு பிடித்த கதை கிடைக்கும்வரை காத்திருந்தேன். சில டைரக்டர்கள் எனது ஒல்லியான தோற்றம் பார்த்து நடிக்க அழைக்காமல் நிராகரித்துள்ளார்கள்.

எனது கலர், உடல் அமைப்பை பார்த்து ஒதுக்கி தள்ளினார்கள். இப்படி இருக்கும் உன்னை எப்படி நடிக்க வைப்பது என நேரடியாக சிலர் கூறி என்னை மோசமான மனநிலைக்கு உள்ளாக்கினார்கள். அதை எல்லாம் தாங்கிக்கொண்டு என் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தேன்.

என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் தும்பா பட இயக்குனர் ஹரிஷ்ராம் தான் என சொல்லும்போதே கண்ணீர் விட்டு கதறி அழுதார் கீர்த்தி பாண்டியன். சில நிமிடங்கள் பேச முடியாமல் தடுமாறிப்போய் அப்படியே மேடையில் நின்றார்.

keerthi pandiyan

அவரை படக்குழுவினர் தேற்றி மீண்டும் அவரை பேச வைத்தபோது, இந்த படத்திற்காக நான் ஷார்ட் அணிந்தபோது அது எனக்கு துளியும் செட்டாகவில்லை. ஆனால் டைரக்டர் எனக்கு மன தைரியம் கொடுத்து என்னை நன்றாக நடிக்க வைத்தார். என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று உணர்வுப்பூர்வமாக பேசி அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments