Thursday, November 14, 2024
Homecricketநீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.. கோபத்தில் திட்டிய கோலி.. சமாதானம் செய்த ரோஹித்.. திடுக்...

நீ போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.. கோபத்தில் திட்டிய கோலி.. சமாதானம் செய்த ரோஹித்.. திடுக் சம்பவம்!

லண்டன்: நேற்று வங்கதேசம் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி கோபமாக திட்டிய சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது. நேற்று இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த தொடரில் நடந்த மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கடைசி வரை இந்த போட்டி மிகவும் திரில்லாக சென்றது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பும்ரா, கோலி ஆகியோர் களத்தில் கோபம் அடையும் அளவிற்கு மைதானத்தில் பரபரப்பு நிலவியது.

வெற்றி நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராக இந்தியா வெற்றிபெற்று இருக்கிறது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார்கள். கடைசி வரை இந்த போட்டி கடைசி வரை மிகவும் திரில்லாக சென்றது.

இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் நிதானமாக ஆடியது. கடைசியில் 286 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. பும்ரா போட்ட ஓவரில் வங்கதேச டெய்ல் எண்ட் வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். என்ன பரபரப்பு வங்கதேசத்திற்கு எதிரான இந்த லீக் ஆட்டத்தில் நேற்று முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்திய வீரர் பாண்டியா போட்ட 16வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. அந்த பந்தில், சரியாக சில்லி மிட் ஆன் திசையில் நின்று இருந்த கோலியிடம் சவுமியா சர்க்கார் கேட்ச் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அவர் அவுட்டான பின் வங்கதேசம் அணி திணறியது. கேட்ச் அந்த அணியில் விழுந்த இரண்டாவது விக்கெட் இதுவாகும்.

இந்த கேட்சை பிடித்ததும் கோலி கோபம் அடைந்தார். அதுவரை விக்கெட் விழாத வெறியில் இருந்த கோலி சவுமியாவை பார்த்து ”டைம் டு கோ” என்று கத்தினார். அவர் சொன்னதை அப்படியே வர்ணனையாளர்கள் திருப்பி சொன்னார்கள். எப்போதும் எதிரணி வீரர்களை சவுமியா சீண்டுவது வழக்கம்.

அதனால் கோலி அவரை எதிர்த்து சீண்டினார். என்ன கோபம் இதை பார்த்ததும் நடுவர் அதிர்ச்சி ஆகி கோலியிடம் வந்து பேசினார். இதை பார்த்த பின் ரோஹித் சர்மாவும் கோலியிடம் வந்து சமாதானம் பேசினார்.

ஏற்கனவே கோலி நேற்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments