Tuesday, December 24, 2024
Homehealth tipsஉடல் துர்நாற்றம் காரணமென்ன? அதை போக்குவது எப்படி? | how to prevent body odour...

உடல் துர்நாற்றம் காரணமென்ன? அதை போக்குவது எப்படி? | how to prevent body odour naturally

சிலர் உடலிலிருந்து துர்நாற்றம் அதிகப்படியாக வீசும். அருகில் செல்லும்போதே குபீரென அந்த வாடை அடித்து மூக்கை துளைக்கும். அது உள்ளுக்குள் சென்று நமக்கு குமட்டலை ஏற்படுத்தும். அந்தளவிற்கு அது மோசமானதாக இருக்கும். குளித்து எவ்வளவு நாட்களாகியதோ என நமக்கு எண்ணத் தோன்றும். அப்படிப்பட்ட கெட்ட வாசம் (Body odor) உடலிலிருந்து ஏன் வெளிப்படுகிறது? அதற்கு என்ன தீர்வு என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவை குறைத்து, புரோட்டினின் அளவு அதிகமாகும்போது உடலில் துர்நாற்றம் அடிக்கும். ஏனெனில் அவ்வாறு நடக்கும்பொழுது உடலில் கீட்டோன்கள் அதிகமாக வெளியேற்றப்படுகிறது. இதனால் உடல் துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளுதல் நல்லது. 
மலச்சிக்கல் பல சிக்கலை உருவாக்கும் என்பார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு உடலிலில் துர்நாற்றம் ஏற்படும். இதுபோன்றவர்களின் உடலிலிருந்து டாக்சின்கள் முறையாக ஜீரண மண்டலத்தின் வழியாக வெளியேற்றப்படாமல் இருப்பதால், அவைகள் சருமத்துளைகளின் வழியே வெறியேறும். அப்பொழுது அவர்களின் உடலிலிருந்து ஒருவிதமான மனதிற்கு ஒவ்வாத துர்வாடை அடிக்கும்.

udal thurnattram

மாட்டிறைச்சி உண்பது உடலுக்கு நல்லது. என்றாலும் அது ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் உடலிலிருந்து வெளிப்படும் வாயு ஒரு வித கெட்ட வாசனையை உருவாக்கும். அதில் உள்ள அமினோ அமிலம் தோலில் உள்ள பாக்டீரியாவுடன் சேர்ந்து வினைபுரிந்து பிறருக்கு பிடிக்காத ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். முறையான ஜீரண மண்டல செயல்பாடு உடையவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படாது. 
சர்க்கரை நோய் உடலில் பல பிரச்னைகளை உண்டு பண்ணும். சர்க்கை நோயுள்ளவர்களின் உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்படுவதால், கொழுப்புக்கள் உடைக்கப்படும். இப்படி உடைக்கும் போது அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தினசரி மது அருந்துபவர்களின் உடலில் துர்நாற்றம் அதிகம் வீசும். உடலில் வியர்வை அதிகமாக வெளியேறி அருகில் செல்ல முடியாத அளவிற்கு மோசமான ஒரு கெட்ட ஸ்மெல் அடிக்கும். 
சிலருக்கு மன அழுத்தத்தினால் கூட இந்த பிரச்னை ஏற்படும். இதனால் ஏற்படும் வியர்வையில் துர்நாற்றம் அடிக்கும். இந்த வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியில் இருந்து சுரப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது. 

உடலில் துர்நாற்றம் – தவிர்ப்பது எப்படி? (how to prevent body odor naturally)

1. அன்றாட குளியல்.
2. முறையான உணவு பழக்கம்
3. சரியானநேரத்தில் கழிவுகளை வெறியேற்றுவது
4. தேவையான உடல் பயிற்சி
இந்தநான்கும் சரிவர செய்தாலே போதும். மேலும் சிலருக்கு உடல் உள்ளுறுப்புகள் கெட்டுபோவதால் உடலில் துர்நாற்றம் ஏற்படும். அதுபோன்றவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி, உண்மையில் ஏன் துர்நாற்றம் ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம். 
மேலும், இயற்கையான வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக உடலிலிருந்து வெளிவரும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்தலாம். ஆனால் அது நிரந்தர தீர்வாக அமையாது. 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments