Tuesday, December 24, 2024
Homeசினிமா24 மணி நேரத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடலை அடிச்சுத் தூக்கிய ‘அகலாதே’!

24 மணி நேரத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடலை அடிச்சுத் தூக்கிய ‘அகலாதே’!

சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைபபடத்தின் முதல் சிங்கிள் டிராக் ’சிங்கப்பெண்ணே’ பாடல் கடந்த 23ம் தேதி வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் அது லீக்கானது. அப்பொழுதே அது வைரலாக தொடங்கியது.

அதன் பிறகு , இந்தப் பாடல் வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 73 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 8 லட்சம் பேர் லைக்ஸூம், 59 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர்.

இதுவரைக்கும் வெளிவந்த விஜய் பாடல்களிலேயே இதுதான் மிக அதிக பார்வைகளை வெகு விரைவில் பெற்று வந்த பாடல் என ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில்,

இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின்  “நேர்கொண்ட பார்வை” படத்தின் “அகலாதே” பாடலை 24 மணிநேரத்தில் 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம், படம் வெளியாவதற்கு முன்னதாகவே விஜய்யின் சாதனையை தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பாடல் முறியடித்துள்ளது.

nerkonda parvai - pikil

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ள நேர்கொண்ட திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி கடந்த 25-ம் தேதி அகலாதே பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே 50  லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 73 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 3 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 20ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments