Tuesday, December 24, 2024
Homeசினிமாமீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் "கோமாளி" ! | எழுந்தது புதிய சர்ச்சை !

மீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் “கோமாளி” ! | எழுந்தது புதிய சர்ச்சை !

கோமாளி ட்ரைலர் வந்து ரஜினியை கிண்டலடிக்கும் வகையில் காட்சி அமைந்தது ரஜினி ரசிகர்களை தாறு மாறாக பேச வைத்தது. அது இணையத்தில் பெரும் வைரலாகியது. அதன் பிறகு அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது.  அதில் இடம்பெற்றிருக்கும் காட்சி இதுதான்.

அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.

ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.

komali rajini

இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “நானும் ரஜினி ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வருவதை நானும் ரசிகர்களைப் போல் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரஜினியின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன். கோமாளி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கோமாளி திரைப்பட பாடலொன்றி ரஜினி விமர்சித்து கிண்டலடிக்கும் படியான பாடல் ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பாடல் வரிகளில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்கள் எல்லாம் பாட்டியாகிவிட்டார்கள். அவர்களுடைய பேத்திகள் இப்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வந்துவிட்டார்கள் என்ற தொணியில் பாடல் அமைந்துள்ளது. இது தீவிரமாக ரஜினியின் சினிமா வாழ்க்கையை விமர்சிப்பது போல உள்ளது ரசிகர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

இப்படி தொடர்ந்து ரஜினி பற்றிய கருத்துகளால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கோமாளி திரைப்படம் செலவில்லாமலேயே போதுமான விளம்பரத்தை ஏற்படுத்துவிட்டது என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ ரஜினி பற்றிய கருத்துகளை வைத்தால் மிக எளிதாக மக்களிடையே படம் ரீச்சாகிவிடும் என்ற கருத்து தற்பொழுது உண்மையாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கோமாளி படத்தைப்பற்றி பேச்சுதான் உள்ளது. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments