1. உடல் எடை திடீரென கூடுவதற்கு தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். இதனால் உடல் எடை திடீரென அதிகரிக்க வாய்ப்புண்டு.
2. அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருப்பவர்களுக்கு, உடல் எடை கூட அதிக வாய்ப்பு உண்டு.
3. சிலருக்கு தாகம் எது? பசி எது என்று கூட வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாது. தாகம் எடுத்தால் பசி என்று நினைத்து வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
4. தூக்கம் கெடுவதால் உடல் எடை அதிகரிக்கும். நன்றாக உண்டு, பகலில் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
5. மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு கூட சில நேரங்களில் அதிக எடை அதிகரிப்புக்கு காரணமாகி விடுகிறது. இதனால் அதிக உணவு நம்மை அறியாமல் எடுத்துக்கொள்வதே இதற்கு காரணம்.
6. உணவோடு சேர்த்து உண்ணும் ஊறுகாய், வடாம், வத்தல், மற்றும் அப்பளம் போன்ற உப உணவுகளால் கூட உடல் எடை துரித கதியில் அதிகரித்திடும். பசிக்கு உண்ண வேண்டுமே தவிர, ருசிக்கு உண்ணக்கூடாது.
8. என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடை கூடுவதை தடுக்க முடியாது என்பார்கள். ஆனால் உடல் பயற்சி முடித்தவுடன், தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை கூடும். புரத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக வைத்திருக்க முடியும்.
9. உண்ணும் உணவில் தேவையான சத்துக்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.
10. புரத சத்து குறைந்தால் உடல் எடை கூடும். புரத சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.
11. ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழ்ந்த தூக்கம் உடல் எடையை சீராக வைத்திட உதவும். இரவில் அதிகம் தூக்கம் கெடுதல், பகலில் அதிகம் தூங்கி எழுதல் போன்றவை உடல் எடைக்கு காரணமாக இருக்கின்றன.
12. கணினி, அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வியாபார நிமித்தமாக அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு உடல் எடை கூடிக்கொண்டே போகும். அதிக உடலியக்கம் இல்லாதவர்களுக்கு கட்டாயம் உடல் எடை கூடும்.
13. வயது அதிகரிக்க உடல் எடை சற்று கூட செய்யும். அது இயற்கையான நிகழ்வு. ஆனால் தினம் தோறும் உடற்பயிற்சி , நடை பயற்சி, பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவு என வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்பவர்களுக்கு உடல் எடை கூடுதல் பிரச்னை இல்லாமல், நோய் நொடி அண்டாமல் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும்.
உடல் எடை கூடுவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கின்றன. இவை யாவற்றிற்கும் நாமே காரணமாக இருக்கிறோம். நம் உடல். நம் மனம். நம்மைத் தவிர வேறு யாரும் எதற்கும் காரணமாக இருக்கவே முடியாது. உங்கள் எடை அதிகரிக்கிறதென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், வாழ்க்கை முறை தான் காரணமாக இருக்கும். என்ன காரணத்தால் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை ஆய்ந்துணர்ந்து அதற்கு ஏற்ப, உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து, உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழலாம்.
என்று உங்கள் அன்பு நண்பன்.