Wednesday, January 22, 2025
Homebig bossபிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 3 வர வர பட்டய கிளப்ப ஆரம்பித்திருக்கிறது. ரசிகர்கள் இன்று என்ன ஆகுமா? நாளை என்னவெல்லாம் நடக்குமோ என பேராவல் கொண்டு தினமும் தவறாமல் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர். அந்தளவிற்கு சுவராஸ்யமிக்க நிகழ்ச்சியாக அது உருவெடுத்துள்ளது.

சில பல களப்போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் உள்ளே நுழைந்த வனிதாவிற்கு நாளொன்றுக்கு 2.5 லட்சம் சம்பளமாம். இதற்கு முன்பு அவர் வாங்கிய சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாய் தானாம். எலிமினேன் ஆன பிறகு, மீண்டும் உள்ளே நுழைந்தவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இதற்கு முன்பு சேரன் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக அவர்கள் 15 லட்சம் ரூபாயை முன் பணமாக பெற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

மற்ற போட்டியாளர்களின் சம்பளம் என்ன தெரியுமா?

தர்சனுக்கு ரூபாய் 50 ஆயிரம்
சரவணனுக்கு ரூபாய் 80 ஆயிரம்
அதேபோல கவின், முகன் க்கு கூட 50 ஆயிரம்தான்.

இந்த வரிசையில் ஷெரின், லாஸ்லியா யும் அடங்குவார்கள். அது மட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மதுமிதாவிற்கு 80 ஆயிரம். தற்கொலை முயற்சி செய்த தால் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப பட்டார் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அதற்கு காரணம் வேறு ஒன்று உண்டாம்.

big boss athiga sambalam

சரி.. பிறகு லேட்டாக நுழைந்தாலும் லேட்டஸ்ட்டாக நுழைந்த கஸ்தூரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? நாளொன்றிற்கு 1.25 லட்சம் ரூபாய்.  ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா? பின்னே பிஞ்சு குழந்தையைக் கூட பொருட்டாக நினைக்காமல் பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்து பணம் சம்பாதிக்க வந்த அவருக்கு அது கூட கிடைக்கவில்லை என்றால் எப்படி?

பணம் தான் குறிக்கோள் என்ற நிலையில்தான் எல்லோரும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சியை நடத்தும் தனியார் டி.வி. உட்பட. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments