Monday, December 23, 2024
Homebig bossபிக்பாஸ் வீட்டை சேரன் வெளியேறவில்லை. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் வீட்டை சேரன் வெளியேறவில்லை. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறி விட்டதாக எல்லோரும் நினைத்துக்க கொண்டிருக்கிறோம். 75 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களுக்குச் சவால் விடும் வகையில் நல்ல முறையில் நடந்து கொண்ட ஒரே பங்களிப்பாளர் சேரன் என அனைவருக்கும் தெரியும்.

அங்குள்ள மற்ற போட்டியாளர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிலேயே நியாயமாக நடந்துகொள்ளும் மனிதர் சேரன் என பெயர் எடுத்திருந்த வேளையில் திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறிவிட்டார் என தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அது உண்மையில்லையாம்.

சேரன் தனக்கு “சீக்ரெட்” ரூம் கேட்டதாகவும், தற்பொழுது அந்த ரூமில்தான் சேரன் உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் அவ்வளவு சீக்கிரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு போகமாட்டார். அவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.


big boss cheran

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீடு விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் முழுமையான உண்மையில்லை என தெரியவந்துள்ளது. சேரன் இந்த சீசனின் இறுதி வரை இருந்து இந்த டைட்டிலை வின் செய்வார் என ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் உள்ளனர். நிச்சயமாக அவர் அந்த பணியை சிறப்பாக செய்து வெற்றிபெறுவார் என உலகின் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் நம்புகின்றனர். சேரனுக்கு கடைசி வரைக்கும் அதிர்ஷ்டம் உதவுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments