Monday, December 23, 2024
Homefacebookதிருமணத்திற்கு மாப்பிள்ளை வேண்டும் - பேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் !

திருமணத்திற்கு மாப்பிள்ளை வேண்டும் – பேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் !

பேஸ்புக் என்றாலே காத தூரம் ஓடும் பெண்கள் இருக்கின்றார்கள். காரணம் பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டால், அதை வைத்து மார்பிங் செய்து விடுவார்கள் என்பதுதான். அப்படி மாற்றி யமைக்கப்பட்ட படங்கள் உலகம் முழுவதும் பகிரப்படுவதால் அவர்களுக்கு பாதுகாப்பு குறைவு, மற்றும் குடும்பங்களுக்கு கவுரவ குறைவு ஏற்படும் என்பதாலேயே பலரும் தங்களது உண்மையான புகைப்படங்களை வெளிவிடுவதில்லை.

ஆனால் கேரளாவில் ஒரு பெண் தன்னுடைய புகைப்படத்தைப் பதிவேற்றிவிட்டு, தனக்கு பொருத்தமான மாப்பிள்ளை வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டு அதற்கு பொருத்தமான மாப்பிள்ளை வேண்டியிருக்கிறார்.

jothi mappillai

அத்தோடு விட்டாரா? பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார். தன்னைப் போன்று மாப்பிள்ளை தேடுவோருக்கு உதவிகரமாக FB Matrimonial ஒன்றினையும் தொடங்கிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பதிவின் சாராம்சம் இதுதான். தான் fashion desinging முடித்திருப்பதாகவும், தனக்கு 28 வயது நிரம்பி விட்டதாகவும் பதிவேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்ப நபர்களைப்பற்றிய விபரங்களையும் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண் முகநூலில் தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும் விபரமாக, துணிச்சலாக பதிவிட்டது இதுவே முதல் முறை ஆகும்.
அவர் முகநூலில் பதிவிட்ட பதிவு 7500 ஷேர்களை பெற்றுள்ளது. மேலும் ஜோதிக்கு பெற்றோர் இல்லை என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர் பதிவிட்ட முகநூல் பதிவிற்கு நிறைய பதில்கள் வந்துள்ளன.

அதன் மூலம் நிச்சயமாக சரியானதொரு மாப்பிள்ளை ஜோதிக்கு அமைவார் என அனைவரும் நம்புகின்றனர். முகநூல் பொழுதுபோக்க மட்டுமல்ல.. இதுபோன்று ஏராளமான பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments