Tuesday, December 24, 2024
HomeCinema Reviewஅது மட்டும்தான் காதலா? த்ருவ்வை கலாய்க்கும் நெட்டிசன்கள் !

அது மட்டும்தான் காதலா? த்ருவ்வை கலாய்க்கும் நெட்டிசன்கள் !

சமீபத்தில் வெளியாகி, திரையங்குகளில் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் படம் “ஆதித்ய வர்மா”. காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அநேகரால விமர்சினத்துக்கு உள்ளாகி வருகிறது.

தமிழ் திரை உலகிற்கு அடுத்த தலைமுறை நடிகர் கிடைத்து விட்டார் என்று சந்தோஷிக்கும் வேளையில், இந்த படத்தின் நாயகியும், நாயகனும் செய்வதற்கு பெயர் காதலா? என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல், காட்சிக்கு காட்சி “லிப்லாக்” முத்தம், நினைத்துவுடன் உடலுறவு கொள்வது, அடிக்கடி மது, சிகரெட் பிடிப்பது என அனைத்து வகையிலும் ஒழுக்க கேடானா விஷயங்களையே காட்சிப்படுத்தியுள்ளனர். இளைஞர்களை கவருகிறேன் என்ற நோக்கத்தில் அவர்களை இன்னும் அதி பயங்கரமான கெட்ட பழக்கங்களில் ஈடுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

adithya varma cinema vimarchanam

இதனால் திரைப்படத்திற்கு குடும்பத்துடன், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சென்று பார்க்கும்படியான சூழல் இல்லை. திரைப்படத்திற்கு A சர்டிபிகேட் பெற்றிருப்பதன் மூலம் பெண்கள் இந்த படத்தை திரையங்குகளில் காண முடியாத வகையில் செய்துள்ளனர்.

வசூலில் பெரிய இழப்பை சந்தித்திருக்கும் இந்த படத்திற்கு, த்ருவ் நடிப்பு மட்டுமே ப்ளஸ் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் படத்திலேயே த்ருவ் முத்திரைப் பதித்துள்ளதால் அவரை புகழாதவர்கள் இல்லை. ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் இது துருவ்விற்கு முதல் படமே இல்லை என்கின்றனர். இதற்கு முன்பு த்ருவ் நடித்த இதே படத்திற்கு வர்மா என பெயரிடப்பட்டிருந்தது. பிறகு இயக்கம் சரியில்லை என்பதால் அந்த படம் கைவிடப்பட்டு, மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் தற்போதை இயக்குனரை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளனர்.

சினிமா ரீதியாக படம், படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் பாராட்டைப் பெற்றுள்ளனர் என்ற போதும், ரசிகர்கள் ரீதியாக பார்க்கும்போது, இளவட்ட பயல்களுக்கான படம் இது. அவ்வளவே.

இதனால்தான் படம் வெளிவந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் வெறும் 90 லட்சம் மட்டுமே வசூல் பெற்றுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியிட்ட திரைப்பட தயாரிப்பாளருக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் காட்சிக்கு காட்சி காம மோகத்தை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதைதான் நெட்டிசன்கள் த்ருவ் எப்படி இதுபோன்ற காட்சிகளுக்கு சம்மதிதார் என கலாய்த்து வருகின்றனர்.
Tags: Cinema, Review, Movie Review, Adhithya Varma, Tamil Cinema.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments