Monday, December 23, 2024
Homecinemaஆடை படத்தில் அப்படி நடித்ததில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ! அமலாபால் அதிரடி பேட்டி...

ஆடை படத்தில் அப்படி நடித்ததில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ! அமலாபால் அதிரடி பேட்டி !

இன்று தமிழ் சினிமா மட்டுமல்ல.. உலகமெங்கும் உள்ள சினிமாக்களில் கிளாமர் ரோல் செய்வதற்கு என தனியாக எந்த நடிகையும் இல்லை. ஹீரோயினாக நடிப்பவர்களே அதையும் செய்து விட்டுப் போகிறார்கள். பணத்திற்கு பணமும் ஆச்சு. நடிப்புக்கு நடிப்பும் ஆச்சு என அவர்கள் நம்புகிறார்கள்.

aadai amala paul

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைப்பதை குறைப்பதற்காகவே நல்ல அழகான கதாநாயகிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை கவர்ச்சி ஆட்டம் ஆட வைத்து விடுகிறார்கள். நடிகைகளும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என முடிவெடுத்து, இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நல்ல பிள்ளையாக நடித்து பெயர் வாங்கிக்கொள்கிறார்கள்.

அப்படி கிளாமர் ரோலில் நடித்துவரும் நடிகைகளுக்கு மத்தியில் அமலாபால் வித்தியாசமானவர். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக ஆடையின்றி நடித்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆடையின்றி இருக்கும் அந்த ஒரு போஸ்டரே அந்த படத்திற்கு படு பயங்கரமான விளம்பரமாக அமைந்தது.

aadai amala paul

படம் வெளிவந்த பிறகு, ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்தனர். முதன் முதலாக ஒரு தமிழ் நடிகை நிர்வாணமாக நடிப்பதை பார்க்கச் சென்றனர். ஆனால் அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

யாரும் செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்ய துணிந்ததற்காக அமலாபாலை பல ரசிகர்கள் பாராட்டினாலும், அது பெண்கள் மத்தியில் பெரும் சரிவையே சந்தித்தது. படத்திற்கு தேவையான காட்சி என்பதால் தயங்காமல் நடிக்க சம்மதித்தேன் என அமலா பால் ஒரு டிவி பேட்டியில் கூறியிருந்தார்.

சமீபத்தில் அதுபற்றி கேள்வி ஒன்றிற்கு கதைக்குத் தேவையானால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஒரு கலைஞன் செய்ய வேண்டியதை நான் உணர்வு பூர்வமாக சிந்த்தித்து அந்த படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்தே தீர வேண்டும் என்ற நிலையில் நடித்திருந்தேன். இதனால் எனக்கு ஆடை அவிழ்ப்பதில் எந்த ஒரு ஆபாசமும் , அச்சமும் இல்லை என்று கூறியிருந்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments