Monday, December 23, 2024
Hometamilnadu government jobரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு வழக்காடல் துறையில் வேலை வேண்டுமா?

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு வழக்காடல் துறையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 15

பணியிடம்: சென்னை, மதுரை

தகுதி: விண்ணப்பத்தாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30க்கு மிகாமலும், பிசி, எம்எம்சி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
அரசு தலைமை வழக்குரைஞர்,  அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை – 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2020

RELATED ARTICLES

Most Popular

Recent Comments