Monday, December 23, 2024
HomeAndroidஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் !

ஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் !

ஆன்ட்ராய்டு திறன் பேசியில் அளவுக்கு அதிகமான செயலிகளை அடைத்து வைத்திருப்பர். அவற்றில் அவசியமான செயலிகள் எவையெவை என்பதை காண்போம். இன்றைய இளைஞர்கள் பொழுதுபோக்கு மற்றும் சமதாயத்திற்கு உதவாத, நேரத்தை தின்று தீர்க்கும் செயலிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிகளவு நேரத்தை அதனை பயன்படுத்துவதன் மூலம் விரயமாக்குகின்றனர். அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு “ஸ்மார்போன்” பயனரும் தங்களுடைய திறன்பேசியில் வைத்திருக்க வேண்டிய அவசியமான செயலிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

Google Translate – ஆங்கிலம் புரியவில்லையா இதோ உங்களுக்கான செயலி

Naukri – வேலை தேடுவோருக்கான செயலி

Redbus – பேருந்து முன்பதிவிற்கான செயலி

Mintly – சிறந்த முழுநேர மற்றும் பகுதிநேர வேலை தேடுவோருக்கான செயலி

IRCTC – ரயில் முன்பதிவிற்கான செயலி

best android app 2020

Applock – இது உங்களின் அனுமதி இல்லாமல் மற்றோர் உங்கள் போனை பயன்படுத்துவதை தடுக்கிறது. இது ஆப் களை மட்டும் லாக் செய்ய பயன்படுகிறது

Daily Hunt – செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம்

UC Browser -ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து செய்திகள் கொண்ட செயலி

True Caller – நமக்கு வந்த அழைப்புகள் யாரிடமிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள பயன்படுகிறது

Google Pay (Tez) – மொபைல் ரீசார்ச், டிடிஹெச் ரீசார்ச், மின்சாரம் மற்றம் தண்ணீர் கட்டணம் செலுத்துதல், இலவச பணபரிவர்த்தனை போன்றவைக்கு பயன்படுகிறது

Share It – வேறொருவர் ஃபோனிலிருந்து உங்களுக்கு ஃபோட்டோ, வீடியோ, மற்றும் தேவையான அனைத்தையும் ட்ரான்ஸ்பர் செய்துகொள்ளலாம்,

Ola – கார் அல்லது ஆட்டோ முன்பதிவு செய்து நினைத்த இடத்திற்கு செல்ல பயன்படுகிறது.

Lyrics in Tamil – தமிழ் பாடல் வரிகளை தமிழ் மொழியில் பெறவும், விருப்பமான பாடல் வரிகளை கேட்டுப் பெறவும், பாடல் வரிகளைத் திருத்தவும் பயன்படும் ஆன்ட்ராய்டு செயலி.

இவைகளை தரவிறக்கம் செய்ய GOOGLE PLAY STORE ல் சென்று, app name கொடுத்து தேடி, இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

மேற்கண்ட பட்டியல் நபருக்கு நபர் வேறுபடும். இவைகள் அனைத்தும் எனது விருப்பத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. உங்களது விருப்பப் பட்டியல் மற்றும் பயனுள்ள செயலிகளை நீங்கள் கீழே உள்ள “கமெண்ட்” பெட்டியில் தெரிவிக்கலாம். நண்பர்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

#செயலி #திறன்பேசி #பயனுள்ளவை

RELATED ARTICLES

Most Popular

Recent Comments