இந்த செயல்பாடுகள் அனைத்துமே இணையம் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இங்குதான் நமக்கு சங்கு வைக்க ஒரு சில யுக்திகள், ஓட்டைகளை இணைய திருடர்கள் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடமிருந்து பணத்தை காப்பாற்ற மத்திய அரசு ஒரு புதிய வழியை (திட்டத்தை ) கையில் எடுத்து பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.
அது cyber swachhta kedra பாதுகாப்புத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களுடன் உங்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை இந்த நிறுவனம் தீங்கு ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும்.
உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக உங்கள் இன்டர்நெட் வழங்குபவர் உதவியுடன் உங்களுக்கு ஒரு எஸ் எம் எஸ் மற்றும் link அனுப்பும். இதில் நீங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தும்.
இந்த குழு அனைத்து நாட்களிலும் நமக்காக வேலை செய்கிறது.
இதன்மூலம் உங்களது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பாதுகாப்புடன் இருக்கும்.
இந்த திட்டம் வந்த கடந்த 3 ஆண்டுகளில் பெரும்பாலான இணைய வழி பண திருட்டு குற்றங்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உங்களுக்கும் இதுபோன்ற குறுந்தகவல் வந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
As per government of India’s Cyber Swachhta project, your device is probably infected with botnet malware. Please visit http://www.cyberswachhtakendra.gov.in for remediation
இந்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்திற்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் நாடுகளின் சைபர் தாக்குதலை தடுக்க மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
#இணையகுற்றம் #பணதிருட்டு #பாதுகாப்பு #வங்கிகணக்கு