Thursday, November 14, 2024
Homehealth tipsசார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா? என்ன சொல்கிறது ரிப்போர்ட்?

சார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா? என்ன சொல்கிறது ரிப்போர்ட்?

அவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து மக்கள் அச்சம் கொள்வதும் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனாஇன் வுஹானில் கடல் உணவு சந்தையிலிருந்து உருவாகியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (nCoV) உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

சீனாவில் மட்டும் அதிகமான அளவில் பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பராமல் இருக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரைக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்சைவிட பரவல் விகிதம் கொரோனோ வைரஸ் ற்கு உள்ளதால் மேலும் அச்சப்பட வேண்டியதுள்ளது. சார்ஸ் வைரஸ் severe acute respiratory syndrome 2002 – 2003 ஹாங்காங்கில் உருவாகி பிறகு மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இதனால் 8500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது அதி தீவிரமடைந்து வரும் கொரோனோ வைரஸ் க்கு புதிய தடுப்பு மருந்து ஏதும் இல்லை. ஆன்ட் பயோடிக் மருந்துகள் பாக்டீரீக்களை கட்டுப்படுத்துமே தவிர, வைரஸ் க்கான மருந்து கிடையாது. சார்ஸ் வைரஸ் போன்றே ஒத்தியல்புகள் கொரோனோ விற்கு உள்ளதால் அதிக எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கரோனோ வைரஸ் இதுவரைக்கும் 100க்கும் அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. இது தினந்தோறும் 100 கணக்கானோருக்கு பரவி வருவதால் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்ததுள்ளளது.

கொரோன வைரஸ் தாக்கம் – அறிகுறிகள்

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் காய்ச்சல், இருமல், மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் தோன்றும்.
அதன் பிறகு அது தீவிரமடைந்து, சுவாச நோயில் முடியும். கடுமையான சுவாச பிரச்னை ஏற்பட்டு மூச்சு திணறல் உருவாகும். இந்த நிலையை ARDS என குறிப்பிடுகின்றனர்.

corono virus thakkam

இது ஒரு ஆபத்தான கட்டத்தை குறிக்கும் அறிகுறியாகும். சரியான முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தில் கொண்டு வந்து விடும்.

ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தக்கூடாது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே ஆன்ட்டி பயோடிக் மருந்து பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவும் விகிதம்

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, சார்ஸ் வைரஸ் பரவல் முதல் இரண்டு மாதங்களில் அதி வேகமாக இருந்து, ஒரு மாத காலத்திற்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாட்டு நிலைக்கு வந்ததது.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் விகிதம் சார்சைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. 500 முதல் 2000 பேர் வரை கொரானோ வைரஸ் ஐந்தே நாட்களில் பரவியது. சார்ஸ் இந்த தொகையை அடைய ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.

இதன் அறிகுறிகள் தென்பட அதிக பட்சம் சார்சைவிட அதிக நாள் எடுத்துக்கொள்வதால் நோய் பரவுதலை கட்டுப்படுத்த அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் இறப்பு விகிதம்

சார்ஸ்சைவிட இது இறப்பு விகித த்தில் பின் தங்கியே உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விடயம். இறப்பு விகிதம் சார்சைவிட 5 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.

நோயாளிகளின் மீட்பு விகிதம்

சார்ஸ் வைரஸ்சால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் கொரானோ வைரஸ் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  சிகிச்சை முறையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து இந்ந நிலைமை மாறலாம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு மண்டலைத்தைப் பொறுத்து நோய் தாக்கியவர்கள் குணமாவது அமையும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் விகிதம்

இதுவரை வெளிவந்த தரவுகளின் அடிப்படையில் சார்ஸ்சை விட கொரான மாற்ற நாடுகளில் பரவும் விகிதம் குறைவாகவே உள்ளது. சார்ஸ் 30% வெளிநாடுகளில் பரவி இருந்தது. தற்பொழுது கொரோனா வைரஸ் பரவல் விகிதம் 14% மட்டுமே உள்ளது.

கொரோனோ – சார்ஸ் ஒப்பீட்டளவில் அதி தீவிரமாக மற்ற நாடுகளில் பரவவில்லை. எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை எப்படி இருக்கும் என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியவரும்.

#கொரோனா #வைரஸ் #நோய்தாக்கம் #அறிகுறிகள் #பாதிப்புகள் #காய்ச்சல்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments