Tuesday, December 24, 2024
Homeactor jeevaவெளிநாட்டில் நடந்த நடிகர் ஜீவா மேட்டர் இதுதான் ! அந்த ஓட்டலில் அவர் அப்படி...

வெளிநாட்டில் நடந்த நடிகர் ஜீவா மேட்டர் இதுதான் ! அந்த ஓட்டலில் அவர் அப்படி என்ன தான் செய்தார்? விபரம் உள்ளே !

வெளிநாட்டில் நடிகர் ஜீவா ஹோட்டலில் கைது செய்யப்படார் என்ற செய்தி, நேற்றைய வரை பர பரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் அந்த நாட்டு சட்டத்திற்கு  எதிராக அப்படி என்னதான் செய்தார்? எதனால் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டார் . ஸ்காட்லாந்தில் நடந்தது என்ன? ஜீவாவே அதை விவரிக்கிறார்.

83 திரைப்படம்;

பாலிவுட் திரைப்பட நடிகர் ரன்வீர் சிங் நடித்து வெளியாக உள்ள படம் 83 திரைப்படம். அவர் நடித்துள்ள அத்திரைப்படத்தில் “பர்ஸ்ட்லுக்” போஸ்டர் நேற்று முந்தைய தினம் வெளியிப்பட்டது. அந்த படத்தில் நம் ஜீவா ஸ்ரீகாந்த் ஆக நடித்துள்ளார். பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியிட்ட விழாவில், ஸ்காட்லாந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிவித்தார்.
அவர் அதைப்பற்றி கூறியதாவது.

nadigar jeeva

டைரக்டர் விஷ்ணு மூலம் எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அணுகிய போது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க நான் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

பிறகு ஸ்காட்லாந்தில் முதல் கட்டப்படபடிப்பு தொடங்கியபோது நான் அந்த சம்பவத்தால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.படத்தின் படி ஸ்ரீகாந்த் புகைப்பிடப்பதை போல நடிக்க வேண்டும். அப்போது அவர் ஸ்டைலில் புகைப்பிடிக்க பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

ஹோட்டலில் புகை அலாரம் அடித்தது

அது தெரியாமல் அங்கிருந்த ஹோட்டலில் உள்ள புகை அலாரம் தற் செயலாக அடித்து  ஊரையே கூட்டிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் , எங்களை முழு படக் குழுவினரையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர்.

நடிகர் ஜீவா இதைப்பற்றிக் கூறியதாவது:

என் சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடந்ததே இல்லை. இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் மிகப்பெரிய நடிகர். பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், இவருடைய நகைச்சுவையான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள். இந்த படத்தில் ஸ்ரீகாந்தின் கேரக்டரில் நடிப்பது எனக்குப் பெருமை.

இதனால் நாடு முழுவதும் நான் பிரபலமடைவேன். இந்திய சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

#HOTEL #ACTOR #JEEVA #SCOTLAND

RELATED ARTICLES

Most Popular

Recent Comments