Wednesday, January 22, 2025
Homecinemaரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD...

ரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, திமுக தலைவர்கள் இறந்த பிறகு, தம்மிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த ஒரு பவர்புல்லான தலைவர் உருவாகும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. அசைக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்ததும், அதன் பிறகு அவர் உடல்நிலை கோளாறால் அவதி பட்டு, கடந்த தேர்தல்களில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததும் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் படி செய்துவிட்ட இந்த வேளையில், அடுத்த ரஜினிகாந்த் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியும் என்ற உருவாகிக் கொண்டிருக்கிறது.

rajinikanth man vs wild

நிலையற்ற செயல்பாடுகளால் ரஜினி ரசிகர்கள் வருத்தம்

ரஜினிகாந்தின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது. இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் மெல்ல மெல்ல அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் பெரியதாக ஏதும் மாற்றங்களைச் செய்யவில்லை. இருப்பினும் மீடியா விடுவதாக இல்லை. அவ்வப்பொழுது கேள்விகளை எழுப்பி, அவர் அரசியலுக்கு வருவதற்குண்டா அனைத்து முகாந்திரங்களையும் முன் வைத்து பேசத் துவங்கியது. 
ஆனால் ரஜினிகாந்த் இன்னும் பொறுமை காத்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவரது படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய திருப்புமுனையை அவரது அரசியல் பிரவேசம் ஏற்படுத்தக்கூடும் என மக்கள் மற்றும் மத்திய அரசு கட்சிகள் நம்புகின்றனர். 

ரஜினி கீழே விழுந்தாரா?  படபிடிப்பில் என்னதான் நடந்தது?

இந்நிலையில் பிரபல தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் MAN vs Wild நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தபொழுது, அங்கு தவறி விழுந்துவிட்டதாக பேசப்பட்டது. அப்போது அவருக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டதாகவும், அதனால் படபிடிப்பை ரத்து செய்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாயின. 
ரஜினிகாந்த் பாறையின் மீதேறும்போது கால் சற்று இடறி சறுக்கி விழுந்ததாகவும், அதனால் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்ட் கிழிபட்டு இலேசாக தொடையில் சிராய்ப்பு ஏற்பட்டதாகவும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த லைட்டிங் பாய் தெரிவித்தார். இதனால் இலேசான வலி இருந்ததால் அவர் உடனடியாக ஓய்வு எடுக்க வீட்டிற்கு திரும்பினார் என்ற நம்பகத்தகுந்த தகவல் ஒன்றும் வெளியாயின. 
ரஜினி அசைந்தாலே அதை செய்தி ஆக்கும் ஊடகங்கள், அவர் தவறி விழுந்து அடிப்பட்டால் சும்மா இருக்குமா? அதனால் அதை ஊதி பெரிதாக்கி பரபரப்புக்காக மிகப்பெரிய தலைப்புச் செய்தியாக மாற்றிவிட்டனர். அவரின் சிறிய சிறிய அசைவுகளை செய்தியாக்கும் ஊடகங்கள், அவர் விழுந்து விட்டதை செய்தி யாக்காமல் விட்டால்தான் ஆச்சர்யம். இதுதான் ரஜினியை ஊடகங்கள் வச்சி செய்யும் ரகசியம் கூட. பரபரப்புக்கு பரப்பு. ட்ரெண்டுக்கு ட்ரெண்ட். டி.ஆர்.பி ரேட்டிங்கு அதிகரிக்கும். 
rajini youngster

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன ரஜினிகாந்த்

அவர் நேற்று முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி இருந்தார். 
உண்மையில் அதுபோன்ற “லைவ்” ஷோக்களில் காயங்கள், சிறு சிராய்ப்புகள் மற்றும் உடல் பாதிப்புகள் உருவாவது மிக மிக இயல்பானதுதான் என்றும், அதைப்பற்றி என்றுமே தான் கவலைப்பட்டதில்லை என்றும் அந்த நிகழ்வின் நாயகனான Bear Grllys தெரிவித்தார். 
படபிடிப்பு நல்ல விதமாக முடிந்ததாகவும், விரைவில் Rajini Kanth மற்றும் Bear Grllys இணைந்து எடுக்கப்பட்ட MAN VS WILD EPISODE ஒளிப்பரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
#Rajinikanth #twitter #manvswild #episode #beargrllys #discoverychannel
RELATED ARTICLES

Most Popular

Recent Comments