அரசியலில் தொடங்கி அம்மா, அப்பா, காதல், நட்பு, பைக் அலப்பறைகள் என தொடர்ச்சியாக அலப்ப றைகள் விடியோக்களை வெளியிட்டு இணையதளத்தில் அலப்பறை செய்து கொண்டிருந்த நக்கலைட்ஸ் குழுவினர் மகளிர் தினம் வருவதை முன் னிட்டு ‘பீரியட்ஸ் அலப்பறைகள்’ என்ற தலைப்பில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு ள்ளனர். அதாவது பெண்களின் மாதவிடாய் குறித்த விடியோவாக இது அமைந்துள்ளது.
இந்த விடியோ அம்மா, அண்ணன், தங்கை என மூன்று பேர் அடங்கிய சிறிய நடுத்தர வர்க குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உடன்பிறந்த தங் கைக்கு நாப்கின் வாங்கி வர அண்ணன் மறுக்கிறார் என்பதில் இருந்து இந்த விடியோ தொடங்குகிறது. அதற்கு அம்மா வும் இது பெண்கள் சமாச்சாரம், ஆண்களிடம் தெரிவிக் காமல் கலாச்சாரத்தை பேணி காக்கவேண்டும் என்று மகளுக்கு அறிவுரை கூறுகிறார்.
இதையடுத்து, அந்த பெண்ணே நேரடியாக மருந்தகத்துக்குச் சென்று வாங்க நினைத்தால், அதில் அந்த பெண் எத்தனை இன்ன ல்கள் எதிர்கொள்கிறார் என்பதை கச்சிதமாக காட்சிப்படுத்தி நிதர்சனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கைக்கு அண்ணன் நாப்கின் வா ங்கி வந்தால் என்ன? நாப்கினை எந்தவித பேக்கிங் கும் இல்லாமல் கையில் எடுத்து வந் தால் என்ன? அது ஏன் பெண்கள் சமாச்சாரம்? என அடுத்தடுத்த காட்சிகள் மூலம் கேள்விகளை அடுக்கியுள்ளனர்.
இந்த கேள்விகளோடு நில்லாமல் இதைவிட மிக முக்கியமான விஷயங்களை இந்த விடியோ பதிவு செய்கிறது.
அந்த பெண் நாப்கினை கையில் வாங்கி வந்ததற்காக பெண்ணின் அம்மா கதாபாத்திரம் ஒரு விளக்கம் அளிப்பார். அதன் மூலம், முந்தைய தலைமுறையில், மாத விடாய் காலங்களில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு இழிவு படுத்துகிறோம் என்பதை அறியாமலே இழிவு படுத்தப்பட்டதை பதிவு செய்கிறார். மேலும், அதை காரணம் காட்டி உன்னை வீட்டுக்குள் விட்டதே பெரிய விஷயம் என்பது போல் சித்தரிக்கிறார்.
பிறகு, இவள் 3 நாட்கள் வேலை ஏதும் செய்யாமல் ஓப்பி அடிப்பதற்காக இப்படி பேசுகிறாள். விளம்பரங்களில் பார்த்திருக்கிறேன், அதில் பெண்கள் நாப்கின் வைத்துக் கொண்டே பாட்மிண்டன் விளையாடுகிறார்கள் என்று ஒரு காட்சியில் அந்த அண்ணன் தனது அம்மாவிடம் பேசுவான்.
அதற்கு அந்த தங்கை அளிக்கும் பதில் மிகவும் கவனிக்கத் தக்கது. “விளம்பரங்களில் யாரோ கார்பிரேட் கம்பெனி சொல் வதை நம்புவீர்கள், ஆனால், கண் முன்னே நாங்கள் படும் வேதனையை உணரமாட்டீர்கள்” என்பார். இந்த வசனம், அந்த அண்ணன் கதா பாத்திரத்துக்கு தங்கை எழுப்பும் கேள்வியாக அல்லாமல், மாத விடாய் குறித்த புரிதலற்ற ஆண் சமூகத்துக்கு பெண்கள் எழுப்பும் கேள்வியாகவே அமைந்துள்ளது.
இந்த உரையாடலில், அண்ணன் கதாபாத்திரத்தின் வசனமும் மிக முக்கியம்.
காரணம், மாதவிடாய் பற்றின போதிய புரிதல் அல்லாமல் 2019-ஆம் ஆண்டிலும் மாதவிடாய் என்றால் தீட்டு என போற்றி, இதை ஆண்களிடமிருந்தும், ஆண் குழந்தை களிடமிருந்தும் விலக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதை பற்றின உரை யாடலை ஆண் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லாமலே காலம் காலமாக மறைக்கப்பட்டு, தவிர்க்கப்பட்டு வருகிறது.
அப்படி இருக்கையில் அதை பற்றின போதிய விவரம் அறியாத ஒரு சமூகத்திடம், மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் மலை ஏறுகிறாள், பாட்மிண்டன் விளை யாடுகிறாள், கிரிக்கெட் விளையாடுகிறாள் என்று அதன்பின் இருக்கும் வலியை முற்றிலுமாக மறைத்து விளம்பரங்களை உருவாக்கினால், அது எத்தனை அபத்தமாக இருக்க முடியும்.
கடைசியாக, அந்த பெண் எழுப்பிய கேள்விகள் மூலம் அண்ணன் கதாபாத்திரமும், அம்மா கதா பாத்திரமும் இயல்பை உணர்ந்து, இந்த காலகட்டத்தில் பெண்ணுக்கு அவசி யமான உணவுப் பழக்கங்களை என்ன என்பதை அறிந்து பழங்கள் எடுத்துச் சென்று கவனிப்பது போல் நேர்மறையாக முடித்துள்ளனர்.
இந்த இயல்பை விடியோ வில் உள்ள கதா பாத்திரங்கள் உணர்ந்துவிட்டன. ஆனால், சமூகத்தில் இது போன்ற ஒரு மாற்றம் முன்னேற்றம் எப்போது உணரப்படும். நாளை மகளிர் தினம்.
பெண்கள் ஆலயத்தினுள் நுழையக் கூடாது என்று தடை விதித்து எதிர்ப்பு தெரிவித்து பரிகார பூஜை செய்ய ப்பட்டு வரும் சூழலில் இதுபோன்ற கருத்துகள் கொண்ட விடியோ க்களை எதிர்பார்ப்பதே மிகவும் அரிது. அதனால், அந்த வகையில் மாதவிடாய் இயல் பானது என்பதை உணர்த்தி, அதை பற்றின உரையாடலையும், விவாதத்தையும் பொது தளத்தில் எழுப்பும் இதுபோன்ற கருத்து களுடைய விடியோக்கள் நிச் சயம் வரவேற்கத்தக்கதே. பிறகு, யூடியூப் சேனல் என்பதால் எளிதில் இளைஞர்களை சென்றடைந்துவிடும் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த விடியோவை யூடியூப்பில் இதுவரை சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். யூடியூப் ட்ரெ ண்டிங்கில் ஏழாவதாக உள்ளது.