Monday, December 23, 2024
Homenewsகணவர் வீர மரணமடைந்த 3 மாத்ததில் , தானும் இராணவத்தில் சேர்ந்த வீர பெண்மணி !

கணவர் வீர மரணமடைந்த 3 மாத்ததில் , தானும் இராணவத்தில் சேர்ந்த வீர பெண்மணி !

இராணுவத்தில் சேர்ந்த பிறகு, உயிர் நாட்டுக்கு, உடல் மண்ணுக்கு என்ற தாரக மந்திரம்தான் ஒவ்வொரு வீரனுக்கும் ஒப்புவிக்கப்படும். அதன்படிதான் மனைவி, குழந்தை, இரத்த சொந்த பந்தங்கள் என அனைவரையும் மறந்து, நாட்டு மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மட்டுமே மனதில் கொண்டு பணி புரிந்து வருபவர்கள் இராணுவ வீரர்கள். இவர்கள் இரவு பகல் பாராது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபதுவதால்தான் நம்மால் நாட்டிற்குள் , வீட்டிற்குள் நிம்மதியாக தூங்க முடிகிறது. இல்லையெனில் ஒரே இரவில் நம்முடைய நாட்டை அந்நியர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஆங்கிலேயர்கள் போல அடக்கு முறைகளை ஏவி, கொடுமைபடுத்தி, சுதந்திரத்தைப் பறித்து, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரிதாபகரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம். அப்படிப்பட்ட இராணவ பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்த ஓராண்டுக்குள், அவருடைய மனைவியும் கடும் சிரமத்திற்குப் பிறகு ராணுவ அதிகாரிக்கான பயிற்சியில் சேர உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த, மேஜர் விபூதி டவுண்டியால், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு, பிப்., 17ல், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுடன் நடந்த, 20 மணி நேர சண்டையில் அவர் உயிரிழந்தார். அவருடன், மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அப்போது, 35 வயதான விபூதியின் உடல், டேராடூனுக்கு இறுதி மரியாதை செலுத்த கொண்டு வரப்பட்டது. திருமணமான, ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தி, கணவரின் காதருகே சென்று, ‘ஐ லவ் யூ’ என, அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது, அனைவரின் இதயமும் கசிந்தது.

kanavarai ilantha pen ranuvathil sernthar

இது நடந்து, ஓராண்டாகியுள்ள நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில், கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில் சேருகிறார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான தேர்வை எழுதினார். ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமி யில், ஓராண்டு பயிற்சியில் சேர உள்ளார் நிகிதா. ”ராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்காக கடந்த, ஓராண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ”என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன். அதுதான் எனக்கு பலத்தை, மனதிடத்தை அளிக்கிறது,” என, நிகிதா கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட வீரமங்கையை நாம் போற்றிப் புகழ வேண்டும். இந்த பதிவு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்களுடைய தேச பற்றை, பக்தியை காட்டுங்கள். ஜெய்ஹிந்த். !

RELATED ARTICLES

Most Popular

Recent Comments