Sunday, December 22, 2024
Homehealth tipsகொரான வைரஸ் அறிகுறிகள் ! இது இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் !

கொரான வைரஸ் அறிகுறிகள் ! இது இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் !

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் கிருமி  வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது  சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும்  கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கொரான  வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இதன்  எண்ணிக்கை ஏழாகிறது.

கொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன.இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த சுவாச பிரச்சினை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை தான் இந்த கொரான வைரஸின்  அறிகுறிகள் என்றும் . இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments