Sunday, December 22, 2024
Homecinemaமன்மத ராசா பாடல் சாயா சிங்கா இப்படி? மாஸ்டர் உடன் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய...

மன்மத ராசா பாடல் சாயா சிங்கா இப்படி? மாஸ்டர் உடன் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ..!

மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து, பிரபலமான பாடலாக இன்று வரை இருந்து வருகிறது. தனுஷ், சாயா சிங் நடித்த அந்த பாடல் அன்று மிக பிரபலம். எந்த டிவியை எடுத்தாலும் அந்த பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். FM Radio , தனியார் தொலைக்காட்சிகள் Youtube என எங்கு பார்த்தாலும் அந்த பாடல் தான்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டும் நடிக்க சாயா சிங்கிற்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. என்றாலும், அவர் தன்னுடைய பிசினசில் கவனத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் சிவ சங்கர் உடன் “மன்மத ராசா” பாடலுக்கு டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தினா இசை, ஃபாஸ்ட் பீட் நடனம் என இளைஞர்களைக் கவர்ந்த இந்தப் பாடலுக்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் சிவசங்கர் மாஸ்டருடன் மீண்டும் இணைந்து நடனமாடியுள்ளார் சாயா சிங்.

saya sing dance manmatha rasa song

அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகை சாயா சிங், அனைவருக்கும் என்னுடைய பிறந்தநாள் விருந்தாக உங்களுக்கு பிடித்தமான திருடா திருடி படத்தின் பாடல் என்றும் ஒரு வருடத்துக்கு முன்னர் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்த போது எடுத்த வீடியோ என்றும் பதிவிட்டுள்ளார். அது பழைய வீடியோவா இருந்தாலும் இன்ஸ்டா கிராமில் ஃபயர் ஆகி, வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக சாயா சிங்க சீரியல் நடிகர் கிருஷ்ணாவை 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, விஷாலின் ஆக்‌ஷன், அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களிலும் சீரியல்களிலும் இப்பொழுதும் நடித்து வருகிறார்.

My birthday treat to all u guys who love This song n the movie.. A year back wen I met Shivshankar master, I cudn’t help but relive the moment.. #thirudathirudi #manmatharasa #recreatinghistory #relivingmemories #dhanush #dhanushfan

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments