எனக்கு மிகவும் பிடித்த உணவு பருப்பு ரசம் – அரிசி சோறு. அதை அம்மா பொங்கி கொடுக்க, சூடாக எடுத்து வாயில் வைத்து சாப்பிடும்போது, அதிக எச்சில் ஊறும். அதன் சுவையே தனி.
அடடா டா… அப்படி ஒரு சுகம் அதில் கிடைக்கும்.
சோறு என்பது உண்பதற்கு மட்டுமல்ல.. அது மனதையும் சேர்ந்து கவர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது நம் உடலில் ஒட்டும்.
எனவே அதை ரசித்து உண்ண வேண்டும். இல்லையென்றால் அது நமக்கு இரத தம் ஊற செய்யாது.
நிதம் சோறு தின்று வாழும் நாம், அதை விளைவிக்கும் விவசாயியை மறந்து விட்டோம். அவன் கடனில் திண்டாடுகிறான்.
நாம் பணத்தை கற்றையாக வைத்துக்கொண்டு, எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு விட்டோம்.
ஒரு கட்டத்திற்கு மேல், விவசாயம் நின்று போனால் நமக்கு உணவு எங்கிருந்து கிடைக்கும்? எனவே நாம் விவசாயியை போற்ற வேண்டும்.
உழவுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட வேண்டும். ஒவ்வொரு படித்த இளைஞரும், விவசாயத்தை முறையாக கற்றுக்கொண்டு விவசாயியாக மாற வேண்டும்.