Wednesday, January 22, 2025
HomeUncategorizedபூவே உனக்காக தொடரின் நாயகி இவரோட மகளா? அட..இத்தனை நாள் தெரியாம போச்சே... !!!

பூவே உனக்காக தொடரின் நாயகி இவரோட மகளா? அட..இத்தனை நாள் தெரியாம போச்சே… !!!

jovitha

 பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் “பூவே உனக்காக” தொடரின் நாயகி யார் தெரியுமா? சொன்னால் நிறைய ஆச்சர்யம் காத்திருக்கு உங்களுக்கு. “கலாசல்” படத்தின் நாயகி ஜோவிதா தான் அவர். 

அவருக்கு ஒரு பெரிய சினிமா பின்னணியே உண்டு. கலாசல் படத்தில் அம்பிகாவின் மகன் ராம்கேசவ் நாயகன் ஆக நடித்தார். அந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், சாய்பிரியா, மதன்பாப், அபிசேக், மற்றும் பானு சந்தர் நடித்திருந்தனர். 

அந்த படத்திற்கு பிறகு கொரோனோ காலம் என்பதால், வேற படங்கள் இல்லை. அதனால் சும்மா இருக்க பிடிக்காமல், தொலைக்காட்சி தொடருக்கு நாயகியாக வந்துவிட்டார் ஜோவிதா. அவர் ஒரு சினிமா பிரபலத்தின் மகள். 

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிவிங்ஸ்டனின் மகள் தான் அவர். சுந்தர புருசன் படத்தின் மூலம் கதாநாயகனா உயர்ந்து புகழ் பெற்றவர் லிவிங்ஸ்டன். அதன் பிறகு சில படங்களில் நாயகன் வாய்ப்பு பெற்ற அவர், தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். 

jovitha

அதோடு மட்டுமில்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஜோவிதா சின்னத்திரைக்கு வந்த காரணத்தை கேட்டபோது, சின்னத்திரைக்கு வந்து, பெரிய கோலிவுட்டில் கோலோச்சியவர்கள் ஏராளம். அதனால் சின்னத்திரை என்பது வாய்ப்புக்கு ஒரு வரபிரசாதம். அதை பயன்படுத்துகிறேன் என்று கூறியிருக்கார். 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments