Wednesday, January 22, 2025
Homecinemaகில்லி பட நடிகர் திடீர் மரணம் ! திரையுலகம் அதிர்ச்சி !

கில்லி பட நடிகர் திடீர் மரணம் ! திரையுலகம் அதிர்ச்சி !

gilly nadigar maranam

 நடிகர் விஜய் நடித்த திரைப்படம்  கில்லி. அது அவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. திரிசா நாயகியாக நடித்த இப்படத்தில் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் நடித்த எழுத்தாளர், நடிகருமான ரூபன் நேற்று திடீரென ஏற்பட்ட மூச்சுத்தின்றால் மரணமடைந்தார். 

ruban jay actor and writer

இவர் தமிழ் சினிமாவில் கதாசிரியராக இருந்து வந்துள்ளார். மேலும் கில்லி உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு முகம் உள்ளிட்ட சில படங்களில் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் வாழ்வில் இவர் ஆற்றியுள்ள சாதனை, “பொன்னியின் செல்வன்” படத்திற்கு திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக இருந்ததுதான். 

ruban and vikram

ரூபனுக்கு 54 வயதாகிறது. கடந்த மாதம் இவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பது உறுதியானது. இவருக்கு ஒரு மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. மன வேதனையில் இருந்த இவருக்கு, தீடீரென உடல் நல குறைவு ஏற்படுத்து திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

vijay and ruban

இந்நிலையில் அவருக்கு கொரோன பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்த்து. இந்நிலையில் அவர் மூச்சு விட சிரம்பபட்டு, நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

இந்த தகவல் அவர் மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதை யடுத்து, பெரும் போராட்டத்திற்கு பிறகும் கூட மருத்துவர்களால் அவரை காப்பாற்ற இயலவில்லை. ரூபன் திடீரென சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து அருகில் உள்ள ஓயாமரி மயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments