பெண்களின் கால்களை அழகு செய்வதில் அதிக பங்கு வகிக்கும் அணிகலன் கொலுசு. அது வெள்ளியில் இருந்தால் இன்னும் அதிக அழகு தரும். நடுத்தர வர்க்கம் முதல், பணக்கார ர்கள் வரை இந்த வெள்ளை நிறத்தில் உள்ள கொலுசுவைதான் அதிகம் விரும்பி அணிவர். குறிப்பாக இள வயது பெண்கள், குமரி பெண்களுக்கு இது அதிக விருப்பம்.
அப்படிப்பட்ட அழகான கொலுசை கடையில் வாங்கும்போது, பளிச்சென தெளிவாக பள பளக்கும். அதுவே அணிந்து பயன்படத் துவங்கிய பிறகு , நாளைடைவில் அதன் பளபளப்புத் தன்மை நீங்கி, அழுக்கு மற்றும் தூசி, மற்றும் உப்பு நீரின் பாதிப்பால் கருமையாக மாறி, அசிங்கமாக காட்சியளிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அதை உடனே கடைக்குச் சென்று மாற்றி புதிய கொலுசு எடுத்துவிட மனம் துடிக்கும்.
பட்ஜெட் குடும்பங்களில் அப்படி மாற்றுவதென்பது மிக சாதாரண விஷயம் இல்லை. அப்படியே மாற்றினாலும், அதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க நேரிடும். எனவே அது இயலாத காரியம். ஆனால் அதற்கு ஒரு நல்ல மாற்று ஏற்பாடு, அந்த கொலுசை புதியது போல மாற்றி அணிவது.
இந்த முறையில் கொலுசை தூய்மை செய்து, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, விழாக்களுக்கு செல்லுகையில் புதிய கொலுசு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நீர் நிரப்பி கொதிக்க விடவும். கொதித்தவுடன் அதில் நல்ல தரமான டிடர்ஜெண்ட் பவுடரை கலக்கவும். பிறகு அதில் அழுக்கடைந்த கொலுசை போட்டு கொதிக்க விடவும்.
10 நிமிட நேர கொதித்தலுக்கு பிறகு, அடுப்பிலிருந்து பாத்திரை எடுத்து, அதிலிருக்கும் கொலுசை எடுத்து, நீங்கள் பழைய Tooth Brush எடுத்துக்கொள்ளவும். அன்றாடம் பல் துலக்கும் பேஸ்ட் வெண்மை நிறமாக இருக்க வேண்டும். உதாரணமாக Coalgate Past எடுத்து கொலுசில் அப்ளை செய்து செய்து, பல் துலக்குவது போல கொலுசை சுத்தப்படுத்தவும்.
பிறகு நல்ல நீரில் அதைப் போட்டு அலசி எடுக்கவும். உங்களை நீங்களே பாராட்டும் அளவுக்கு, அந்த கொலுசு மிக “பளிச்” என இருக்கும். புதிய கொலுசு போல பளபளக்கும்.
இதோ வீடியோ செய்முறை உங்களுக்காக.