தமிழ் படத்தில் நடித்த தனக்கென ஒரு முத்திரைப் பதித்தவர் நடிகை லைலா. விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி இயக்கிய எகிரே பவுரமா என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகுதான்.தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இவரது அழகு மற்றும் நடிப்புத் திறமையை கண்ட முக்கிய இயக்குனர்கள் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி கொண்டிருந்தனர்.
ஆரம்ப கட்டத்தில் தனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்களை விரும்பாத அவர்நடித்தால் கதாநாயகியாக தான் தமிழில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கு நல்ல ஹீரோயின் ரோல் கிடைத்து படத்தில் நடிக்க தொடங்கினார்.
ஒரு படம் நடித்தாலே தாம் தூம் என குதித்துக் கொண்டாடும் நடிகைகளில் இவர் மாறுபட்டவராக இருந்தால், மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொணர்வதில் திறமைசாலியாக இருந்தார். காமெடி, சோகம் என எந்த காட்சிகள் எடுத்தாலும் அதில் தனது நடிப்பு முத்திரையை பதிக்கத் தவறியதில்லை. பாடல்காட்சிகளில் வரும் கிளா மர் கூட அதிகமாக கண் கூசுகிற மாதிரியில்லாமல் ரசிகர்கள் விரும்பும்படி இருந்தது.
சிரித்தால் கண்ணத்தில் விழும் குழி அழகை ரசிகர்கள் வெகுவாக விரும்பினார். இவரிடம் உள்ள இயல்பான சுபாவம் நன்றாக சிரித்து பேசுவதுதான். இயல்பாகவே அது ரசிகர்களை கவர போதுமானதாக இருந்தது. இப்படி சினிமாவில் கொடி கட்டிப் பறந்த நடிகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதிக சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி திருமண வாழ்வில் ஈடுபட்டார்.
இவர் நடித்த பிதாமகன் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. சூர்யாவுடன் நடித்த ட்ரெயின் காமெடி காட்சிகள், வாட்ச் வைத்து லங்கர் ஆட்டம் ஆடியது ரசிகர்களின் கைதட்டலை அள்ளிச் சென்றது. இயல்பாக நடிக்கும் லைலாவின் கண்கள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை பக்கமே வராமல் இருந்து வந்தார்.
அந்த இடைவெளியில் சமூக இணையதளங்களில் தன்னை ஆக்டிவ்வாக வைத்துக்கொண்டு, படங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார். தற்பொழுது நடிகை ,சிவக்குமார் மகன் கார்த்தி நடித்து வெளியான படத்தில் முக்கிய கதா பாத்திரம் ஒன்றில் நடித்து இருக்கிறார்.
நீண்ட நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பதன் மூலம் அவரது ரசிகர்கள் திரையில் பார்த்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு மெஹ்டி என்கிற பிசினஸ் மேனை திருமணம் செய்த லைலாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களினல் ஒருவர் பார்ப்பதற்கு இள வயது விஜய் போன்ற தோற்றத்தில் இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.