Thursday, December 26, 2024
Homecinema90 களில் வெளுத்து வாங்கிய நடிகை ரதி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே...

90 களில் வெளுத்து வாங்கிய நடிகை ரதி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே !

actress rathi

புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரதி. இவர் டைரக்டர் பாரதி ராஜாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர். அதன் பிறகு தனது திறமையால் பல இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை, கழுகு, முரட்டுக்காளை  ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தோற்றத்தில் நடிகை ராதாவை போலவே இருக்கும் இவர் ஒருகாலத்தில் ராதாவின் தங்கை என ரசிகர்களால் நினைக்கப்பட்டவர்.
நல்ல மார்க்கெட்டிங்கில் இருக்கும்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அனில் விர்வானி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  1985 பிப்ரவரி 2 அன்று திருமணம் ஆன நாளிலிருந்து 30 ஆண்டுகள் தனது திருமண பந்த்ததை தொடர்ந்து வந்தார். 

தொடர்ந்து இந்தி திரை உலகின் கதாநாயகியாக வலம் வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்றும் கூடி ரதி என்கிற நடிகையின் அழகுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார். 

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அவருடைய அப்பா இறந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு பிசினசில் ஈடுபட்டார். 
ஒரு கட்டத்தில் திருமண பந்த த்தில் விரிசல் ஏற்படவே , நிரந்தராக திருமண வாழ்வில் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டார். குடும்பத்தில் கணவர் தொல்லை தாங்க முடியாமல் இந்த முடிவை அவர் எடுத்தார்.

பத்து வயதிலிருந்தே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு, அதன் பின்னர் பதினாறு வயதில் திரைத்துறையில் நடிக்க வந்தவர் நடிகை ரதி. 
 1960 ல் டிசம்பர் 10ந் தேதி பிறந்த ரதி அக்னிகோத்ரி அவர்கள் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். அவரின் புகைப்படம். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments