Thursday, January 23, 2025
Homecinemaபெரிய நடிகர் என்ற பிம்பம், புகழ் எல்லாம் வேண்டாம். பேரப்ப்பிள்ளைகளின் பேரன்பு போதும். மகிழ்ந்து ,...

பெரிய நடிகர் என்ற பிம்பம், புகழ் எல்லாம் வேண்டாம். பேரப்ப்பிள்ளைகளின் பேரன்பு போதும். மகிழ்ந்து , மயங்கி கிடக்கலாம் ஆயுசு வரை. 😍😮😮👇👇

rajinikanthஎன்ன தான் சமுதாயத்தில் தான் ஒரு பெரிய மனிதர், புகழ்பெற்றவர்கள் என்றாலும், குடும்பம், உறவு என்று வரும்போது அனைத்தும் மறந்து, பாசத்திற்கு அடிமையாகும் மனிதர்கள் தான் ஏராளம். ஒன்றிரண்டு விதவிலக்காக இருக்கலாம்.

 

ஆனால் தமிழ்  நாட்டில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக வளர்ந்து , தனக்கென திரை உலகில் ஒரு முத்திரை பதித்து, ரசிகர்களை கட்டிப் போட்டிருக்கும் திரு ரஜினிகாந்த் மீது எத்தனையோ விமர்சனம் இருந்தாலும், குடும்பம் என்று வரும்போது, தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நலமாக, வளமாக , பாசப்பிணைப்புடன், சண்டை ச்சசரவுகளின்றி ஒற்றுமையாக இருப்பதையே விருப்பமாக கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா குடும்ப பிரச்னை விவாகரத்து வரை சென்று மீண்டு வந்தத்தற்கும் அவருடைய அனுபவம் மற்றும் இந்த கொள்கை தான் காரணம்.
நிம்மதி என்பது கோடிக்கணக்கான பணத்தை கொட்டுவதால் கிடைத்து விடாது. அது மன அமைதியை தராது என்று நன்றாக உணர்ந்து தான் அவர் எளிமையான வாழ்கையை வாழத்துவங்கினார். உடை உடுத்துவதிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி. அவருக்கு நிகர் அவர்தான்.
உலகெங்கிலும் திரைப்படத்தில் நடித்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தன்னை உயர்த்திக்கொண்ட போதிலும், ஒரு நாளும் அகம்பாவம், இறுமாற்று, கர்வத்துடன் மக்களை நடத்தியதில்லை. அன்பு செலுத்தி, அரவணைத்து, எத்தனையோ நபர்களுக்கு சொல்லாமல் உதவிகள் செய்திருக்கிறார்.
அப்படிப்பட்ட மாமனிதர், தன்னுடைய பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுதலில் பெருமகிழ்ச்சியும், பேரன்பும் கிடைக்கிறதென குறிப்பிட்டிருக்கிறார்.
உலக புகழ், பணம், சொத்து யாவற்றையும் விட, பேரப்பிள்ளைகளின் பேரன்பில், பேரானந்த்ததில் கிடைக்கும் சுகம் வேறெதிலும் இல்லை என்று ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments