சீரியலோ… சினிமா படமோ… எதுவாக இருந்தாலும், அதை நேர்த்தியாக ரசிகர்கள் ரசிக்கும்படியாக , நடிகரகளை அந்த கதா பாத்திரத்திற்கேற்ப நடிக்க வைத்து சிறப்பான அவுட் புட் கொண்டு வருபவர்கள்தான் டைரக்டர்கள். படைப்பாளி என்று சொல்லப்படுகிற அவர்கள் செய்யும் வேலை மகத்தானது.
சினிமா என்றால் கூட ஒரு ஆறு மாதங்களுக்குள்ளாக ஒரு திரைப்படத்தை இயக்கி, மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கும்படியாக பல டெக்னீசியன்களை வைத்து முடித்து விடுவார்கள்.
ஆனால் சின்னத்திரை சீரியல்கள் அப்படியல்ல.. ஒரு காட்சியில் தொடர்ச்சியாக வசனம் பேசி, நடித்து, அதை குறிப்பிட்ட நேரத்திற்கு வரும்படி செய்ய ஏக பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக மெகாத் தொடர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். குறிப்பிட்ட இடத்தில் ஒரு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் சீன்கள், தொய்வில்லாமல், ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் எடுக்க நிறைய மெனக்கெட வேண்டும்.
அந்த வகையில் பிரபலமாக ஓடும் சின்னத்திரை சீரியல்களில் மௌனராகம் ஒன்று. அந்த தொலைக்காட்சித் தொடரை வெற்றிகரமாக இயக்கி வந்தவர் தாய் செல்வம். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சிக்காக மௌனராகம் 1, நாம் இருவரும் நமக்கு இருவர் வெற்றிகரமான சீரியல்களை இயக்கியவர். .
இதனையடுத்து, ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து வெற்றிகரமாக இயக்கி வந்தார்.
முன்னதாக பெரிய திரையில் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் தாய் செல்வம் இயக்கி இருக்கிறார். அந்தபடத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் தாய் செல்வம் திடீரென மரணமடைந்துள்ளார். உடல் நல குறைவால் அவர் மரணத்தின் பிடியில் சிக்கி ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். இவரது மறைவிற்கு பிரபல திரைப்பட நடிகர்/நடிகள், சக சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விஜய் டெலிவிஷன் தங்களுடைய ஆழ்ந்த இரங்களை ட்விட்டரில் பதிவாக வெளியிட்டுள்ளது.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.