என்னதான் திறமையான அழகான நடிகை என்றாலும், சில நேரங்களில் ஏற்படும் நிர்பந்தங்களுக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும். அப்படி ஒத்துக்கொண்டு நடிக்கும் நடிகைகள் பெரும்பாலான வாய்ப்புகளைப் பெற்று திரைத்துறையில் பிரபலமான நடிகைகளாக ஜொலிக்க முடியும்.
அப்படி ஒத்துப்போய் நடித்தால் அவர்களைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். சாதாரண நடிகையை கூட டாப் ரேஞ்சுக்கு கொண்டு போய் வைத்து அழகு பார்ப்பார்கள்.
எந்த நிர்பந்தங்களுக்கும் ஆளாகாமல், திறமையான நடிப்பு மற்றும் ஒழுக்கம் மூலம் முதல் இடத்தைப்பெற்று தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்று வருபவர்கள் சிலர் உண்டு. அவர்களுக்கு பக்க பலமாக முக்கியமான அரசியல் அல்லது சினிமா பிரபலங்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
பார்த்தவுடனே நல்ல முக லட்சணத்துடன், குடும்பாங்காக இருக்கும் பெண்கள் ஒரு சில படங்களுக்கு மேல் நடிக்க கதையம்சம் கொண்ட படங்கள் வராமல் சினிமா துறையிலிருந்து விலகி விடுவர். அப்படிப்பட்ட நடிகைகள் ஏதாவது தொழிலதிபர் அல்லது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையுடன் லைஃப் செட்டில் ஆகிவிடுவர்.
அப்படிப்பட்ட மோசமான சினிமா துறையில் இருந்து கொண்டு, பல போராட்டங்களைச் சந்தித்து இன்று வெற்றி பெற்றுவரும் நடிகளைகளும் உண்டு.
கீர்த்தி சுரேஷ் ஆரம்ப கட்டத்தில் வாய்ப்புகள் பெற முடியாமல் தவித்து வந்த நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் அருமையான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தது. அதன் பிறகு ஏறுமுகம் கண்ட அவர், குறிப்பிட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா வாய்ப்புகள் அதிகமின்றி தவித்து வருகிறார்.
அதுபோன்ற நேரங்களில் இன்ஸ்டா மற்றும் சமூக ஊடகங்களில் படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் செய்து தனது இருப்பை ரசிகர்களுக்கு மத்தியில் காட்டிக்கொண்டிருக்கிறார். அதில் வெளியாகும் படங்கள் சில ட்ரெண்ட் ஆகி, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.