Saturday, September 21, 2024
Homecinemaதிருமணத்திற்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!? பிரச்னைகளுக்கு மேல் பிரச்னையால் டென்சன் ஆன விக்கி...

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..!? பிரச்னைகளுக்கு மேல் பிரச்னையால் டென்சன் ஆன விக்கி !

nayantara movie connect

நயன் விக்கி தயாரிப்பு நிறுவனமான “ரவுடி பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவான திரைப்படம் கனெக்ட். இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். 

கணவராக நடிகர் வினய் யும், அப்பாக நடிகர் சத்யராஜ்ம் இதில் நடித்துள்ளார். 
டைரக்டர் அஸ்வின் சரவணகுமார். இவர் இதற்கு முன்பு டைரக்டர் செய்த இரண்டு ஹார ர் மூவி ஹிட் அடித்து இவருக்கு பெயர் எடுத்து கொடுத்தது. 

இந்நிலையில் நயன்தாரா நாயகியாக நடிக்க கனெக்ட் படத்தை இயக்கினார். 
நன்றாக வந்திருக்கும் இந்த திரைப்படம் இடைவேளை இல்லாமல் வெளியிடுப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இத்திரைப்படம் வரும் 22 ந்தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 
அன்று வெளியாகும் தேதியில் படத்தில் இடைவேளை இல்லாத தால், தியேட்டரின் கடை அரங்குகளில் விற்பனை இல்லாமல் போகும் என்பதால், கட்டாயம் இடைவேளை விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாம். 

இதனால் திட்டமிட்டப்படி படம் வெளியிடப்படுவது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் குழப்பமடைந்துள்ளனர். 

ஏற்கனவே நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடித்த சமீபத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோல்டு’ பெரியதாக வெற்றியை பெற்று தரவில்லை. . 

இதனால் ‘கனெக்ட்’ படத்தை அதிகம் நம்பியுள்ள வேளையில் இப்படி ஒரு சிக்கல் படத்திற்கு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments