Monday, December 23, 2024
Homehealth tipsவயித்து வலிக்கு இப்படி ஒரு பாட்டி வைத்தியம் இருக்கா? உடனடி நிவாரணம் கிடைக்கிறது நினைச்சா ஆச்சர்யமா...

வயித்து வலிக்கு இப்படி ஒரு பாட்டி வைத்தியம் இருக்கா? உடனடி நிவாரணம் கிடைக்கிறது நினைச்சா ஆச்சர்யமா இருக்கே !

vayittru vali patty vaithiyam

நமது உடல் ஆரோகியத்தில் நமது வயிற்றுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான கோளாறுகளுக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. 

நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், நமது வயிற்றின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வயிற்றில் வாயு பிரச்சனை வருவது ஏன்?

பல சமயங்களில், அதிக காரம் நிறைந்த உணவை உண்பதாலோ, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை உட்கொள்வதாலோ, மைதாவால் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதாலோ, அதிகப்படியாக உணவை உட்கொள்வதாலோ, வயிற்றில் வாயுத் தொல்லையும் (Gastric Problem) வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
இதை சரி செய்ய நாம் சில மாத்திரைகளை சாப்பிட்டு, அதனால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் பாதிக்கப்படுகிறோம். அதற்கு பதிலாக காலம் காலமாக நம் முன்னோர்கள் நமக்கு தெரிவித்துள்ள சில வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினால், நமது பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பதோடு, நமக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய சில வீட்டு வைத்திய முறைகளை இங்கே காணலாம்:  
1. அரை டீ ஸ்பூன் ஓமம், கால் டீ ஸ்பூன் கருப்பு உப்பு என இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக்கொண்டு வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்படி செய்தால், வயிற்று வலி, வயிற்றில் வாயு பிரச்சனை, வயிற்று உப்பசம் ஆகிய பிரச்சனைகள் உடனடியாகத் தீரும்.
2. வயிற்றில் வலியோ, வாயு பிரச்சனையோ ஏற்பட்டால், ஒரு சிறிய இஞ்சித் துண்டை  (Ginger) வாயில் போட்டு மெல்லவும். அல்லது வெந்நீரில் இஞ்சியைப் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டிக் குடிக்கவும். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments