Monday, December 23, 2024
HomeHome Remediesதாங்க முடியாத அடி வயிற்று வலி நீங்க இப்படி செய்யுங்க !

தாங்க முடியாத அடி வயிற்று வலி நீங்க இப்படி செய்யுங்க !

thanga mudiyatha vayittru vali neenga

வயிறு வலிக்கு காரணம் குடல்புண், வயிற்றுப்புண் இல்ல வேற ஏதாவது பிரச்சனையா என நாம எல்லாரும் குழம்பி போய் இருப்போம். வயிறு வலிக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்து கொள்ளலாம்.

மாதுளை பழத்தை தோலை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் இரவு மாதுளை தோலை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். அப்படி செய்தால் வயிறு வலி உடனே குணமாகும். ஆண் பெண் ஆகிய இருவருமே இந்த குடிநீரைக் குடிக்கலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும்.

கிராம்பு, கசகசா 3ஸ்பூன், பனை வெல்லம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கசகசாவையும், கிராம்பையும் பொடியாகி அரைத்து எடுத்துக் கொள்ளவும். 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அந்த பொடியை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் பனை வெல்லத்தைச் சேர்த்து எடுத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த குடிநீரை ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் வயிறு வலி உடனே குணமாகும்.

வெந்தயத்தை நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் பொடியாக திரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் மோருடன் அரை ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் வயிற்று வலி உடனடியாக குணமாகும்.

 தண்ணீரை கொதிக்கவைத்து பெருங்காயப் பொடியைச் சேர்த்து, அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். வயிற்று வலி உடனே குணமாகும். 

எலுமிச்சை சாறுடன்

உப்பு சேர்த்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

 சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், வயிற்றுவலி குணமாகும்.

 சுக்கு, மிளகு,  திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் பொடியாக்கி அத்துடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments