Friday, January 24, 2025
Homecinemaகார் பந்தயங்களில் பல பரிசுகளை வென்று அசத்திய நடிகர் அஜித் .. இதுவரை பலரும் பார்த்திடாத...

கார் பந்தயங்களில் பல பரிசுகளை வென்று அசத்திய நடிகர் அஜித் .. இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களை நீங்களே பாருங்க ..!!!

கார் பந்தயங்களில் பல பரிசுகளை வென்று அசத்திய நடிகர் அஜித் .. இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களை நீங்களே பாருங்க ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்.
இவரின் திரைப்படம் ஏதாவது வெளியாகிறது என்றால் ரசிகர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஆரவாரம் செய்வது வழக்கம்.சமீபத்தில் அஜித் நடித்த வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது.துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் திடீரென விலகினார்.இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மயில் திருமேனி இயக்க உள்ளார்.இந்நிலையில் சினிமாவை தாண்டி கார் பந்தயங்கள், துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரைடு போன்றவற்றில் அஜித் அதிக ஈடுபாடு கொண்டவர்.

குறிப்பாக பந்தயக் கார்கள் ஓட்டும் போட்டியில் மும்பை, சென்னை மற்றும் டெல்லி என பல இடங்களில் நடந்த போட்டிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார்.அதேசமயம் சர்வதேச அளவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களில் இவரும் ஒருவர்.2003 ஆம் ஆண்டு பார்முலா ஆசிய bmw போட்டியிலும், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 போட்டியில் அனுமன் இப்ராஹிம் மற்றும் பார்த்திபா சுரேஷ்வரன் கலந்து கொண்டுள்ளார்.

இருவர் சேர்ந்து கார் ஓட்டும் பந்தயத்தில் 1990 ஆம் ஆண்டு பங்கேற்றார். அதனைப் போலவே 2002 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்முலா சிங்கிள் சீட்டர் கார் பந்தயத்திலும் கலந்து கொண்டு நான்காவது இடத்தை பிடித்தார்.ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 2010 ஆம் ஆண்டு பெஸ்ட் ஃபினிஷ் 13வது இடத்தை பெற்றார்.இப்படி பல கார்பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நடிகர் அஜித்தின் அரிய வகை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments