Tuesday, December 24, 2024
Homecinemaஎன்னாது ,, திரையுலகத்தில் இதுவரை பல வருடமாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை...

என்னாது ,, திரையுலகத்தில் இதுவரை பல வருடமாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை யாரென்று தெரியுமா இதோ ..!!

என்னாது ,, திரையுலகத்தில் இதுவரை பல வருடமாகியும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை யாரென்று தெரியுமா இதோ ..!!

தமிழ் சினிமாவில் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு தனது நடிப்பு திறமையை காட்டி இன்றளவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையை பெற்றுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ரேவதி, ஸ்ரீதேவி. ராதா, ரேகா, என பல நடிகைகள் வரிசையில் அப்போதே தனக்கென தனி பாணியையும் ரசிகர்களையும் இன்றளவும் வைத்திருப்பவர் ஊர்வசி.1977-ம் ஆண்டு மலையாளத்தில் விடருன்ன மொட்டுகள் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்வசி இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில்

பிரபலமாக நடித்து வந்த ஊர்வசி தமிழில் 1983-ம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் முந்தானை முடிச்சு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.இந்த படத்தில் இவரது நகைச்சுவை கலந்த நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஊர்வசி இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பல நடிகர்களுடன் நடித்துள்ள இவர் திரையுலகில் இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினி அவர்களுடன் இணைந்து இன்னும் ஒரு படங்களில் கூட நடிக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவர்கள் இணைந்து நடித்திருந்தால் அந்த படம் வேற லெவலில் இருந்திருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் வந்து 38-வருடம் ஆன நிலையில்இன்னும் ஊர்வசி அவர்கள் ரஜினி அவர்களுடன் நடிக்காமல் இருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தாலும் அது தான் உண்மை.சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் மற்றும் சூரரை போற்று திரைப்படங்களில் ஊர்வசியின் நடிப்பு சினிமா வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இனி எதாவது வாய்ப்பு கிடைத்தாலாவது இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என அவர்களது ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments