Sunday, December 22, 2024
Homecinemaஅட சிம்புவை காதலிப்பதாக சொன்ன பிரபல முன்னணி நடிகை !! அந்த நடிகை யாரென்று தெரியுமா...

அட சிம்புவை காதலிப்பதாக சொன்ன பிரபல முன்னணி நடிகை !! அந்த நடிகை யாரென்று தெரியுமா ..?? இதோ ..!!

அட சிம்புவை காதலிப்பதாக சொன்ன பிரபல முன்னணி நடிகை !! அந்த நடிகை யாரென்று தெரியுமா ..?? இதோ ..!! இப்போதுதான் சிம்பு எந்த வித பிரச்சனைகளிலும் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஒரு இளம் நடிகை காதல் போஸ்ட் போட்டு சிம்புவின் கேரியருக்கு வேட்டு வைத்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர். சினிமாவில் சிம்புவின் காதல் விளையாட்டு பற்றி சொல்லவேண்டுமா என்ன.

ஆரம்பத்தில் திரிஷா அதன் பிறகு நயன்தாரா பின்னர் ஹன்சிகா என தொடர்ந்து காதல் வலையில் சிக்கிய சிம்பு கடந்த சில வருடங்களாக சாமியார் என்று சொல்லாத அளவுக்கு தனிமையில் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களாக ஒரு பெரிய வெற்றிப் படத்திற்கு காத்துக் கொண்டிருந்த சிம்புவுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் வெங்கட்பிரபுவின் மாநாடு திரைப்படம்.இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதனால் கடந்த பத்து வருடங்களாக இழந்த தன்னுடைய மார்க்கெட்டை ஒரே படத்தில் தூக்கி விட்டார் சிம்பு. மாநாடு படத்தை போற்றிப் புகழாத ஆட்களே இல்லை. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அந்த படத்தை புகழ்ந்து தள்ளி விட்டனர்.அந்த வகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாநாடுபடத்தை பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்ததாக சிம்புவை குறிப்பிட்டு ஒரு பதிவு போட்டிருந்தார்.

அதற்கு சிம்புவும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு ஹார்ட்டின் ஒன்றை போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.அவ்வளவுதான் இணையதளமே பற்றிக் கொண்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் காதலிப்பதாக ஒரு வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாகிவிட்டது கீர்த்தி சுரேஷ் பதிவு.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments