Saturday, November 23, 2024
HomeAndroidஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History

History of Android

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் Android Phone கள் அதிக பயன்பாட்டில் உள்ளன. காரணம் அதன் கட்டமைப்பு மிக எளிமையானது. இலவசமாக கிடைப்பதும் தான்.

அதனால்தான் செல்போன் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆன்ட்ராய்ட் OS அடிப்படையில் இயங்கிடும் போன்களை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

அத்தகையா ஆன்ட்ராய்ட் போனில் இயங்கும் Android OS ன் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வோம். எந்த ஒரு கண்டுபிடிப்பும் உடனே நமக்கு நேரடியாக கிடைத்து விடுவதில்லை.

பல பரிமானங்களை கடந்துதான் முழு உருவம் பெறுகிறது. அந்த வகையில் “ஆன்ட்ராய்ட்” இயங்குதள நிறுவனம் எப்படி உருவானது? யார் அதை உருவாக்கினார்கள். ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

அது முதலில் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

கலிபோர்னியா மாகாணத்தில் பலோ ஆல்டோ (Palo Alto) எனும் இடத்தில், ஆன்டி ரூபின் (Andy Rubin), ரிச் மைனர் (Rich Miner), நிக் சேர்ஸ் (Nick Sears), கிரிஸ் வொய்ட் (Chris White) ஆகியோர்களால் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்ட்ராய்டு எனும் நிறுவனமானது தொடங்கப்பட்டது.

ஆன்ட்ராய்டு நிறுவனத்தின் ஆரம்ப நோக்கமானது டிஜிட்டல் கேமராக்களுக்கான (Digital Camera) ஒரு மேம்பட்ட இயங்கு தளமாக விளங்கிடும் வகையில் மேம்படுத்தியது.

எனினும் இது உபகரண சந்தையில் பெரிய எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாததாக இருந்தது.

Histroy of android

கையடக்க செல்பேசி இயக்கத்தளத்தில் அப்போதைய பங்கு வகித்த சிம்பியன் மற்றும் விண்டோஸ் மொபைல் ஆகியவற்றின் ஸ்மார்ட்போன் வளர்ச்சி இந்நிறுவனத்தினை (Android) கையடக்க செல்பேசி (Smartphone) நோக்கி திருப்பியது (அச்சமயத்தில் ஆப்பிளின் ஐபோன் வெளியிடப்படவில்லை).

2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அண்ட்ராய்டு நிறுவனத்தை கூகுள் கையகப்படுத்தியது. கூகுளில் ரூபின் அணியினர் லினக்ஸ் கெர்னலில் (Linux Kernel) ஏவக்கூடிய ஒரு செல்லிடப்பேசி சாதன இயங்குதளத்தை உருவாக்கினர்.

20006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லிடப்பேசி சந்தையில் கூகுள் நுழையலாம் என அதிகப்படியான ஊகங்கள் இருந்தன.

BBC மற்றும் த வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருந்து தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், தேடுதல் மற்றும் பயன்பாடுகளை செல்லிடப்பேசியில் கொண்டுவர கூகுள் விரும்புவதாகவும், மேலும் அதை வெளியிடுவதற்குக் கடுமையாகப் பணியாற்றிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தன.

history of android

விரைவில் பத்திரிகை மற்றும் ஆன்லைன் ஊடக வெளியீட்டாளர்கள், கூகுள் முத்திரை கொண்ட கையடக்கப் பேசியை கூகுள் (Google) தயாரித்து வருகிறது என வதந்திகளைப் பரப்பினர்.

இந்த செய்திகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப விவரங்களைக் கூகுள் வரையறுத்து வருவதாகவும், செல்லிடப்பேசி (Cellphone)உற்பத்தியாளர்கள் மற்றும் நெட்வொர்க் இயக்குனர்களுக்கு இதன் மூல அச்சுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன எனவும் பல ஊகங்கள் வெளிவந்தன.

 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்பர்மேசன் வீக் ஒரு எவால்யூசெர்வ் ஆய்வு நடத்தி செல்லிடத் தொலைத்தொடர்புப் பகுதியில் பல்வேறு காப்புரிமை பயன்பாடுகளை கூகுள் பதிவுசெய்துள்ளது எனத் தகவல் வெளியிட்டது.

என்ன நண்பர்களே.. ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தின் வரலாறு தெரிந்துகொண்டீர்களா? இந்த பதிவு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து செய்துகொள்ளுங்கள்.

Tags: Android OS History, Android Phone History, Android Starting History.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments