Saturday, November 23, 2024
HomeAndroidஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 9 முக்கிய செயலிகள்

ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 9 முக்கிய செயலிகள்

9 Essential apps that you must have in your new Android phones

ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதில் ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நிரப்பி வைத்து விடுகின்றனர். ஆனால் முக்கியமாக அதில் இருக்க வேண்டிய அப்ளிகேஷ்னகள் ஒவ்வொருவரின் ஸ்மார்ட் போனிலும் இருக்கிறதா என்றால் அது கேள்விகுறிதான்.

9 essional things in your android phone

ஒரு ஆண்ட்ராய்ட் போனில் என்னென்ன அப்ளிகேஷன்கள் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

1. அவாஸ்ட் – ஆன்ட்டி வைரஸ்

ஆண்ட்ராய்ட் போனில் கட்டாயம் இன்டர்நெட் பயன்படுத்துவோம். அதனால் மல்வேர் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்க நிச்சயமாக ஒரு ஆன்ட்டி வரைஸ் இருப்பது நல்லது.

2. ஸ்விப்ட் கீபோர்ட்

டச் ஸ்கிரீனில் டைப் செய்வது சிரம்மாக இருக்கும். அதை எளிதாக்குவதற்கான டைப்பிங் அப்ளிகேஷன் இது. இதை இன்ஸ்டால் செய்துவிட்டு டைப் செய்வது எளிது. டைப் செய்ய செய்ய என்ன வார்த்தைகள் டைப் செய்ய நினைக்கிறோம் என்ற suggession இதில் காட்டும். வேண்டிய வார்த்தைகளை உடனடியாக அதிலிருந்து தேரந்தெடுத்து விடலாம்.

3. ஃபைல் எக்ஸ்ப்ளோரர்

ஆண்ட்ராய்ட் போனில் உள்ள பைல்களை திறக்க, காப்பி – பேஸ்ட் செய்ய, டெலீட் செய்ய, மற்ற போல்டருக்கு பைல்களை மாற்ற என பல பயனுள்ள செய்கைகளைச் செய்ய இந்த ஆப் பயன்படுகிறது.

4. பிக்சலர் எக்ஸ்பிரஸ்

ஆன்ட்ராய்ட் போனில் எடுக்கப்படும் போட்டோக்களுக்கு அழகான எஃபக்ட்கள் கொடுக்க பயன்படும் ஆப் இது. இதன் மூலம் போட்டோக்களுக்கு பிரைட்னஸ், கான்ட்ராஸ்ட் போன்ற எஃபக்டைகளை கொடுக்க முடியும்.

5. ஐ இன் ஸ்கை வெதர்

இந்த ஆப் மூலம் கால தட்பவெப்ப நிலையை (Weather) கண்டறிய முடியும். நீங்கள் ஏதேனும் வெளியூருக்கு செல்லவிருக்கும் சூழ்நிலையில், அங்கு எப்படிப்பட்ட காலநிலை நிலவுகிறது என்பதை இந்த ஆப் மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப பயணத்தை அமைத்துக்கொள்ளலாம்.

6. டினி ஃப்ளாஸ் லைட் + 

இந்த ஆப் மூலம் கேமிராவின் ப்ளாஸ் லைட்டை டார்ச்சாக பயன்படுத்த முடியும். ஃப்ளாஸ் லைட் இல்லாத போனில் ஸ்கிரீனையே ப்ரைட்னஸ் அதிகபடுத்தி டார்ச்சாக மாற்றி இரவு நேரங்களில் பயன்படுத்த முடியும்.

7. ரன் கீப்பர்.

அதிகாலையில் எழுந்து ஜாக்கிங், ரன்னிங் செல்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் கடந்துள்ள தூரம், உங்களது உடலில் எத்தனை கலோரி செலவிடப்பட்டிருக்கறது போன்ற விபரங்களை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

8. எம்.எக்ஸ் ப்ளேயர்

சில ஆன்ட்ராய்ட் போன்களில் குறிப்பிட்ட வீடியோ பார்மட்களில் உள்ள வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும். MX Player பயன்படுத்துவதன் மூலம் அனைத்து வகை பார்மேட்களில் உள்ள வீடியோக்களை Play செய்து பார்க்க முடியும்.

9. கானா

இது ஒரு FM அப்ளிகேஷன். இதன் மூலம் தமிழ், தெலுங்கு உட்பட 21 மொழிகளில் FM Radio கேட்க முடியும்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. என்னுடைய ஃபோன் தானாகவே அப்ப்ளிகேஷன்கள் திறப்பதும், காண்டாக்ட் லிஸ்ட் திறப்பதும், ஒருகாண்டக்ட் செலெக்ட் செய்வதும், வாட்சாப் திறப்பதும், படங்கள் ஜூம் ஆகி ஜூம் ஆகி வருவதும், வாட்சாப்பில் யாருடைய பக்கமாவது திறந்து அவர்களுக்கு மெசேஜ் ஸ்பேசில் தானாகவே vvvvvvv என்றோ gggggg என்றோ 888888 என்றோ டைப் ஆகித் தள்ளுகிறது. நல்லவேளை, send ஆவதில்லை. என்ன செய்ய வேண்டும்?

Comments are closed.

Most Popular

Recent Comments