கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள்
உங்கள் கம்ப்யூட்டர் பிரச்னையை நீங்களே தீர்ப்பது |
கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க
- கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு முக்கிய காரணம் அதில் அதிமான புரோகிராம்கள் இடம்பெற்றிருப்பதுதான்.
- அடுத்த முக்கியமான ஒரு காரணம் வைரஸ் இருப்பது .
- பின்னணியில் அதிக புரோகிராம்கள் இயங்கி கொண்டிருப்பது.
- மேலும் சில ஸ்டார்ட்-அப் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குவது.
தீர்வு
- Start பட்டனை அழுத்தி தோன்றும் சர்ச் விண்டோவில் ‘msconfig’ என டைப் செய்து, என்டர் பட்டனை தட்டவும்.
- இப்போது “System Configuration” விண்டோ தோன்றும்.
- அதில் “Start UP” டேபை கிளிக் செய்யவும்
- ஸ்டார்ட் அப்பில் என்னென்ன புரோகிராம்கள் தொடங்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கின்றன என்பதை கவனிக்கவும்.
- உங்களுக்குத் தேவையில்லாத புரோகிராம்கள் அதில் தொடங்கும் வகையில் இருந்தால், அதை “UnCheck” செய்திடவும் (டிக் மார்க்கை எடுத்துவிடவும்).
- பிறகு செய்த மாற்றங்களை சேமிக்க Apply, OK கொடுக்கவும்.
அவ்வளவுதான். தேவையில்லாத ஸ்டார்ட் அப் புரோகிராம்களை நிறுத்துவதன் மூலம், அடுத்த முறை கணினி தொடங்குகையில் தொடக்க வேகத்திறன் அதிகரித்திருக்கும்.
தேவையில்லாத புரோகிராம்கள்
கம்ப்யூட்டரில் அளவுக்கு அதிகமான புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும் அதன் இயங்கும் குறையத் தொடங்கும். எனவே அதிக நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் தேவையில்லாத புரோகிராம்கள் UnInstall செய்திடலாம்.
தேவையில்லாத புரோகிம்களை அன்-இன்ஸ்டால் செய்திட
Start =>Control Panel => Programs => Uninstall a Program
என்ற வழியில் தேவையற்ற புரோகிராம்களை தேர்ந்தெடுத்து Uninstall செய்திடலாம்.
அதுபோன்ற உள்ள புரோகிராம்களை நீக்குவதன் மூலம் கம்ப்யூட்டர் வேகம் அதிகரித்திடும்.
சி-டிரைவ் கிளீன்அப்
C Drive CleanUp
பொதுவாக கம்ப்யூட்டரில் புரோகிராம்கள் அனைத்தும் C Drive ல் பதியப்பட்டிருக்கும். சி டிரைவை கிளீன் அப் செய்வதன் மூலம் தேவையில்லாத டெம்ப்ரரி பைல்களை டெலீட் செய்திடலாம். இதனால் C Drive – ல் Free Space அதிகமாகும். கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும்.
TEMP Files:
தற்காலிகமாக கம்ப்யூட்டரால் உருவாக்கப்படும் Temp file களை டெலீட் செய்வதன் மூலம் கணிசமாக கம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்கலாம்.
வைரஸ் – Virus
வைரஸ் புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் செயல்படும்போது கம்ப்யூட்டர் வேகம் குறையும். இதைத் தவிர்க்க கம்ப்யூட்டரில் நல்லதொரு “கட்டண மென்பொருள்” Anti-Virus Software – ஐ இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும். அவ்வப்பொழுது ஸ்கேன் செய்து வைரஸ் பாதிப்பிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாத்திட வேண்டும்.
CCleaner – சீ கிளீனர்
தேவையற்ற கோப்புகள், Browser History, Registry செய்வதும் நல்ல பலனை கொடுக்கும். (Temp Flies). அதற்கு CCleaner என்ற மென்பொருள் பயன்படும்.
இவ்வாறு சிறிய சிறிய பிரச்னைகளை நாமே கையாண்டால் கட்டாயம் கம்ப்யூட்டரில் பெரிய அளவு ரிப்பேர் ஆகாமல் தடுத்திடலாம்.
thanks for this post