Saturday, November 23, 2024
HomeFree softwareவயர்லஸ் நெட்வொர்க் கண்காணிப்பு மென்பொருள்

வயர்லஸ் நெட்வொர்க் கண்காணிப்பு மென்பொருள்

wireless network watcher for wifi internet users

வணக்கம் நண்பர்களே…!
இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இன்று இல்லை என்ற காலம் இது. இன்டர்நெட் வசதியை ஏற்படுத்திக்கொள்ள சில வழிமுறைகள் இருப்பினும், தற்காலத்தில் கம்பியில்லா இணைப்பு முறையான Wi-Fi இணைய முறையையே பலரும் பயன்படுத்துகிறார்கள்.
வைஃபை என்பது கம்பியில்லாத இணைய இணைப்பு என்பது உங்களுக்குத் தெரியும். வைபை மூலம் இணைய இணைப்பைப் பயன்படுத்துபவர்களின் கணக்கை அணுகி, தொடர்பே இல்லாத வேறு நபர்களும் உங்களின் இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
wireless-network-watcher-for-wifi-internet-users
இவ்வாறு மற்றவர்கள் உங்கள் வைஃபை இணைய இணைப்பில் திருட்டுத்தனமாக அணுகிப் பயன்படுத்த முக்கிய காரணமே பாஸ்வேர்ட் கொடுக்காமல், கான்பிகரேசன் இல்லாமல் சுலபமாக இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொள்வவதுதான்.

பெரும்பாலானவர்கள் பாஸ்வேர்ட் கொடுத்து இணைய இணைப்பை ஏற்படுத்துவது சிரமமாக இருப்பதால், நேரடியான இணைப்பை ஏற்படுத்துவதையே விரும்புகின்றனர். 
அவ்வாறு பாஸ்வேர்ட் கொடுக்காமல், இணைய இணைப்பை ஏற்படுத்தும் வைஃபை இன்டர்நெட் கணக்கை மற்றவர்களும் எளிதாக நுழைய முடிகிறது.
வைபை நெட்வொர்கில் உள்ள மிகப்பெரிய குறை இது.

wireless-network-watcher-for-wifi-internet-users

சரி, என்ன செய்யலாம்?
இக்குறையைப் போக்க, உங்களது வைஃபை இன்டர்நெட் இணைப்பில் யார் யாரெல்லாம் இணைந்து உள்ளார்கள் என கண்டறிய ஒரு மென்பொருள் உள்ளது. 
குறைந்த அளவே உள்ள இந்த மென்பொருள் , உங்கள் வைஃபை இணைய இணைப்பில் இணைந்திருப்பவர்களின் IP Address, Mac Address, Network Adopter என்பன போன்ற முக்கியமான தகவல்களை உங்களுக்கு காட்டும்.
இதன் மூலம் உங்கள் வைபை கணக்கை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டறிய முடியும். மீண்டும், அவர்கள் உங்களுடைய வைபை கணக்கை (Wi-Fi Account) பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து நிறுத்தலாம்.
இதனால் உங்களுடைய இன்டர்நெட் பில் அதிகமாகாமல் பாதுகாக்கலாம். 
இம்மென்பொருள் Windows 2000, Windows XP, Windows Server 2003/2008, Windows Vista, Windows 7, மற்றும் Windows 8 ஆகிய கணினிகளில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.. 
உங்கள் வைஃபை இன்டர்நெட் பில் திடீரென அதிகமாகியிருந்தால் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து, நீங்களும் சோதித்துப் பாருங்களேன்…!
உங்களுக்குத் தெரியாமல் யாரேனும் உங்கள் வைஃபை இன்டர்நெட் இன்டர்நெட் (wifi internet bill) இணைப்பைப் பயன்படுத்தப் போறாங்க…
ஜாக்கிரதையா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்ங்க..!
மென்பொருளைத்தரவிறக்கம் சுட்டி- Download Wi-Fi internet Watcher 
நன்றி.
இந்த மென்பொருளைப்பற்றி ஆங்கிலத்தில்: 
Wireless Network Watcher is a small utility that scans your wireless network and displays the list of all computers and devices that are currently connected to your network. 
For every computer or device that is connected to your network, the following information is displayed: IP address, MAC address, the company that manufactured the network card, and optionally the computer name. 
You can also export the connected devices list into html/xml/csv/text file, or copy the list to the clipboard and then paste into Excel or other spreadsheet application.
Tags: wireless, network, Wi-Fi, wireless network watcher, software for wireless network, wifi network watcher, wi-fi network, mini software for wireless network watching, network watching software, network watcher, internet watcher software, application for network watching. internet bill reducing software.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments