Tuesday, November 26, 2024
HomeAndroidஇந்திய பெண்களின் ஸ்மார்ட்போன் மோகம்..!

இந்திய பெண்களின் ஸ்மார்ட்போன் மோகம்..!

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஆண்கள் மட்டும்தான் என்று நினைத்தால் அது தவறு. பல்வேறு வித வயதுடைய பெண்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை (smartphone users) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். அதிலும் பெண்கள் மிகவும் விரும்பி பயன்படுத்துகிறார்கள். அவர்கள் விரும்பி பயன்படுத்தும் ஒரு அலைபேசி – தகவல் தொடர்பு சாதனம் ஒன்று உண்டென்றால் அது ஸ்மார்ட்போன்தான்.

வகை வகையான ஸ்மார்ட்போன்கள்:
(Variety of Smartphones)

ஸ்மார்ட் போன்கள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக கொண்ட ஸ்மார்ட்போன்கள்.
எளிமையானதும், அதிக வசதிகள் கொண்டதும், லட்சக்கணக்கான இலவச அப்ளிகேஷன்களைப் பெற்றிருப்பதும்தான் ஆண்ட்ராய்ட் போன்கள் பிரபலமாக காரணங்கள்.

தற்பொழுது இந்தியாவில் நூற்றைம்பது கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன.

அவற்றில் பெண்கள் மட்டும் மூன்றில் ஒரு பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகவிலையுள்ள ஆப்பிள் போன்கள் (Apple iPhone) மட்டும் இந்தியாவில் ஆறுமடங்கு அளவிற்கு விற்பனையை அதிகரித்துள்ளது என்றால் குறைந்த விலை பிராண்டட் மொபைல்களின் விற்பனை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.

சாதாரணமான போன்களிலிருந்து அனைவரும் ஸ்மார்ட்போனுக்கு மாறிவருகின்றனர் (from ordinary to android smartphone ) என்பதையே இத்தகவல் அறிக்கைகள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தியப் பெண்கள் அவர்களின் ரசனைக்கேற்ப புதிய,புதிய மாடல்களில் வெளிவரும் ஸ்மார்ட்போனை அதிகம் விரும்புகின்றனர் என இந்தியாவின் பிரபல ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியப் பெண்களும் இணையப் பயன்பாடும், ஸ்மார்ட்போனும்:
ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலவுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளனர் (increases internet browsing users through smartphone). இலவச வெப்சைட்கள் முதல் கட்டண வெப்சைட்கள் வரை அனைத்து வெப்சைட்டுகளுமே, கம்ப்யூட்டரின் திரை அளவு, ஸ்மார்ட்போனின் திரை அளவு, டேப்ளட் கணினிகளின் திரை அளவு என அனைத்து திரைகளிலும் இணையதளங்கள் சரியான முறையில் திறக்கவும். அந்த திரைகளின் நீள அகலத்திற்கேற்ப தளத்தை மாற்றியமைக்ககூடிய நிரல்வரிகள் அடங்கிய வார்ப்புருக்களை (Website Template for all devices) உருவாக்கி வருகின்றன.

காரணம் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் முன்பைவிட அதிகமாகிகொண்டே வருவதுதான். இந்தியாவில் மட்டும் 15 கோடி மக்களுக்கும் அதிகமானோர் இணையத்தைப் பயன்படுத்தி இணையவழிச் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதில் இந்தியப் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துவருகிறது.

பள்ளிக் கல்லூரி மாணவிகள், அலுவலக வேலைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் வீட்டிலுள்ள house wife வரை அனைத்துப் பெண்மணிகளும் ஸ்மார்ட்போனை அதிகநேரம் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக ஸ்மார்ட்போன் மூலம் சமூக தளங்களைப் பயன்படுத்துவது, பிரௌசிங் செய்வது, பயனுள்ள வேலைகள் செய்வது, online shopping, போன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும், இணையவழிப் பயன்பாட்டினையும், தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்துவதில் இந்தியப் பெண்கள் முன்னணியில் உள்ளனர்.

இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், ஸ்மார்ட்போன்களும் பல்வேறு வடிவங்களில், பல்வேறு வசதிகளுடன், எளிமையாகப் பயன்படுத்தும் விதத்தில், செல்போன் நிறுவனங்கள் வடிவமைத்து வெளியிடுகின்றன. (All type of smartphones available in Indian mobile markets for college students, officers , house wife)
சீனா, ஜப்பான், அமெரிக்க போன்ற வளர்ச்சிப் பெற்ற நாடுகளைவிட, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் இணையப் பயன்படுத்தும் பெண்களின் வளர்ச்சி விகிடம் இந்தியாவில் அபரிதமாக – அதிகமாக உள்ளது என ஓர் அறிக்கைத் தெரிவிக்கிறது.

ஆண்ட்ராய்ட் போனோ.. ஆப்பிள்போனோ.. ஏரோ பிளானோ, இரயில் வண்டியோ…விண்வெளிப் பணியோ.. ராக்கெட் பயணமோ.. எதுவாக இருப்பினும் இனி எதிலும் முன்னணி வகிப்பது இவர்கள்தான் என்பது தெளிவாகிறது.

இந்திய எந்த துறையானாலும், அதிலும் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதில் இந்தியப் பெண்களின் ஆர்வம் அதிகம். ஆர்வம் என்று சொல்வதை இந்தியப் பெண்களுக்கு ஸ்மார்ட் போன்களின் மீது ஒரு தனி மோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: Indian girls , Smartphone, smartphone for Indian girls, smartphone for Indian women, Indian women’s smartphone, Indian women’s Smartphone interest , android smartphone craze women’s, train, rocket, airplane, uses of smartphone for school students, uses of smartphone school girls, college student,s smartphones, smartphone for collage students, hundred and fifty smartphone users, smartphone users in India, internet users in India, android OS, Indian smartphone, smartphone sales, smartphone sales online.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments