Free chatting software for your mobile phones
மொபைலில் சாட்டிங் செய்வதற்கு பல்வேறு விதமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் இலவசமாக கிடைக்கக்கூடிய தரமான சாட்டிங் மென்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி TEXT CHAT, VOICE CHAT செய்யலாம்.
இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த மென்பொருள்களை தரவிறக்கி, உங்கள் மொபைல்களில் நிறுவிப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதால், உங்களுக்கு தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்கள் GPRS Payment மட்டுமே வசூலிக்கும்.
இந்த Chatting Software துணையுடன் நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்களோடு எளிதாக தொடர்புகொண்டு பேச முடியும். அல்லது எழுத்து வழி உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
அவர்கள் இந்தியாவிலோ, அல்லது வெளிநாடுகளிலோ இருந்தாலும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கருத்துகளை, எண்ணங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
தற்போது வெளிவந்துள்ள புதிய தொழில்நுட்பமான 3G அல்லது அதற்கு மேற்பட்ட வசதிகளையுடைய செல்போன்களை நீங்கள் பயன்படுத்தினால் இந்த வசதிகளை, குறிப்பாக குரல்வழி தொடர்புகளை(Voice Chatting) எளிமையாக செய்து முடிக்க முடியும்.
CHATTING SOFTWARES:
முதன்மையான தொடர்பாடல் மென்பொருள் eBuddy. இந்த மென்பொருள் ஒரு சில செல்போன்களில் இணைத்தே வெளியிட்டிருப்பார்கள். இல்லாதவர்கள் இந்த இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
இந்த மென்பொருளை மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களான Google talk, Facebook, MSN, Yahoo, AIM, ICQ போன்ற பயனர் கணக்குகளைப் பயன்படுத்தி இணையவழி தொடர்பாடலை(Chat) ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
அடுத்து குரல் வழி தொடர்பாடலுக்கு மிகச் சிறந்த மென்பொருளாக கருத்தப்படுவது நிம்பஸ்(Nimbuzz). இந்த மென்பொருளிலும் Google talk, Facebook, MSN, Yahoo, AIM, ICQ, Hyves, Windows Live Manager, SKYPE போன்ற சமூக தளங்களின் பயனர் கணக்கு, மற்றும் இமெயில் சேவைகளைத் தரும் தளங்ளின் பயனர் கணக்குகளைப் பயன்படுத்தியே உள்நுழைந்து தொடர்பாடலை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இதுபோன்ற தொடர்பாடலை ஏற்படுத்திக்கொள்ள Rocketalt, Myzenzo, mig33 போன்ற மென்பொருள்களையும் தரவிறக்கி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் குரல்வழி சாட்டிங் அல்லது எழுத்து வழி தொடர்பாடலை ஏற்படுத்த முடியும்.
நன்றி நண்பர்களே..!
பயனுள்ள பகிர்வுக்க் மிக்க நன்றிங்க…
நல்ல பதிவு…உங்கள் பகிர்விற்கு நன்றி..
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
நல்ல பயன்னுள்ள தகவல்…..உங்கள் பகிர்வுக்கு நன்றி…..
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)