கணினி இல்லையென்றால் என்ன நடக்கும்? சிந்தித்துப் பார்ப்பதற்கே கொஞ்சம் சிரம்மாக இருக்கிறது. இப்போது அனைத்து துறைகளும் கணினி மயமாகிவிட்ட சூழ்நிலையில், கணினி இல்லாவிட்டால் அனைத்து வேலைகளுமே தடைபடும். இவ்வாறு கணினியில் பிரச்னைகள் என்றால் நெல்லை தங்கம் மளிகை ஸ்டோர் ஓனர் கணக்கை கணினியில் ஏற்றவும் முடியாது.. கியூரியோ சிட்டி (Curiosity) செயற்கோளும்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து படங்களை எடுத்து அனுப்ப முடியுமா?
கணினியின் இல்லையெனில் இயங்காது உலகு.. என்பது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.. இப்படி அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படும் கணினியைக் காக்க பயன்படுவதுதான் Microsoft Security Essentials ஆகும்.
இணையத்தைப் பயன்படுத்தாதவர்கள் இன்று இருக்க முடியாது. இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது பல்வேறு இணையதளங்களைத் திறந்திருப்போம். இதனால் நம் கணினியில் தேவையில்லாத கோப்புகள் தரவிறங்கியிருக்கும். கூடவே தொந்தரவு செய்யும் வைரஸ் கோப்புகள் அதில் அடங்கும்.
இத்தகைய வைரஸ் கோப்புகளை நீக்கவும், கணினியைக் காக்கவும் பயன்படுகிறது மைக்ரோசாப்டின் Microsoft Security Essentials மென்பொருள்.
அதிக பட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய இலவச வரைஸ் மென்பொருள்களில் இதுவும் ஒன்று. automatic update -ஐ இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளே செய்துகொள்வதால் பாதுகாப்பின் வலிமை அதிகம்..
முக்கியக் குறிப்பு: இந்த மென்பொருள் Original OS இருக்கிற கணினிகளில் மட்டுமே வேலை செய்யும். பெரும்பாலானவர்களின் கணினியில் Crack செய்யப்பட்ட Operating System மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மிக்க நன்றி நண்பர்களே..!
மிக்க நன்றி…
பயனுள்ள பகிர்வு…
தொடருங்கள்…வாழ்த்துக்கள்… நன்றி…
அப்படிச் சொல்லுங்க…! இது என் தளத்தில் !