Friday, November 22, 2024
HomeFree softwareகம்ப்யூட்டரில் பேசும் மென்பொருள் உருவாக்கிட

கம்ப்யூட்டரில் பேசும் மென்பொருள் உருவாக்கிட

வணக்கம் நண்பர்களே..! விரைவில் சாப்ட்வேர்(software shops) தளத்தின் வடிவமைப்பை மாற்றும் எண்ணம் இருக்கிறது. அதனுடைய முன்னோட்டமாகத்தான் நேற்றைய பொழுது எல்லாமே தளமானது அவ்வப்பொழுது மாறிக்கொண்டே இருந்தது..

கடந்த பதிவில் நீங்கள் எளிய முறையில் ஒரு சாப்ட்வேர் தயாரிக்க முடியும் (you can make speech software easily) என்று கூறியிருந்தேன் அல்லவா? அது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஆம் நண்பர்களே.. நீங்களே உங்கள் கணினியிலேயே ஒரு புதிய சாப்ட்வேரை (New software) உருவாக்கி சோதனை செய்தும் பார்க்கலாம். மிக எளிமையானதாக இருக்கும் சாப்ட்வேர் உருவாக்கும் முறையைப் பார்ப்போம்.

சாதாரணமாக ஒரு மென்பொருளை உருவாக்க அதிகம் படித்திருக்க வேண்டும். அதாவது கணினித் துறையில்(computer technology), கணினி மொழிசார்ந்த படிப்புகளைக்(computer language, programming) கற்றுத் தேர்ந்தவர்களால்தான், பல்வேறு சிரமங்களுக்கு இடையில் ஒரு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. நினைத்தவுடனேயே மென்பொருளை உருவாக்க முடியாது. இதில் உள்ள சிரமங்கள் மென்பொருள் துறையில் உள்ள வல்லுநர்களுக்கு(Software Engineer) நன்றாகவே புரியும்.

இந்த சிரமங்கள் எல்லாம் இல்லாமல் நாமே சுயமாக நமது கணினியைக் கொண்டு மென்பொருளை உருவாக்கிப் பார்ப்போம் வாருங்கள்.

முதலில் நோட்பேட் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.
பிறகு இந்த கோடிங்கை தவறில்லாமல் உள்ளது உள்ளபடியே ஒரு நோட்பேடில் தட்டச்சிட்டு talk.vbs என சேமித்துவிடுங்கள்.

Dim UserInput
userInput = InputBox (“Hi, Suppudu!”)
Set Sapi = Wscript.CreateObject (“SAPI.SpVoice”)
Sapi.speak userInput

தேவையெனில் hi, Suppudu! என்ற இடத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களின் நண்பரின் பெயரையோ போட்டுக்கொள்ளலாம்.
பிறகு talk.vbs என்ற அந்த கோப்பை திறந்து பாருங்கள்..

இவ்வாறு ஒரு பெட்டித் தோன்றும். அதில் நீங்கள் தட்டச்சிடும் வார்த்தைகளை வாசித்து காட்டும். அது மட்டுமா? நம்முடைய தாய்மொழியாம் அன்னைத் தமிழையும் வாசிக்கும். இதற்கு நீங்கள் யுனிகோட் எழுத்துருக்களாக (Unicode) உள்ளிட வேண்டும். அவ்வளவுதான்..

உங்கள் நண்பர்களுக்கும் இதுபோல செய்து அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்க அடியுங்கள்.. இனி நீங்களும் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர்தான்(Software Engineer)… என்ன நண்பர்களே… நீங்கள் சாப்ட்வேரை உருவாக்கிவிட்டீர்களா? உங்களுடைய சாப்ட்வேர் பேசுகிறதா?


என்ன ரிசல்ட் கிடைச்சதுன்னு எனக்கு எழுதுங்க…மற்றுமொரு அருமையான பதிவின் வழி சந்திப்போம்.. நன்றி நண்பர்களே..!

RELATED ARTICLES

11 COMMENTS

  1. நண்பரே,

    அருமை, டெக்ஸ்ட் பாக்ஸ் தொடர்ந்து வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் .

    நன்றி

Comments are closed.

Most Popular

Recent Comments