Anti virus நிறுவுதல், C Cleaner போன்ற மென்பொருள்களை நிறுவிப் பாதுகாத்து வந்திருப்பீர்கள்.
சில நேரங்களில் அதையும் மீறி ஏதேனும் ஒரு வகையில் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டு இயங்காமல் போய்விடும். சில நேரங்களில் அப்படியே அல்லது வைரஸ் தாக்கம் வந்துவிடும். பாதுகாப்பாக இருந்தும் கூட உங்கள் கணினியை நீங்கள் ஒரு சில சமயம் வைரஸ் தாக்கத்திலிருந்து தடுப்பது கடினம்.
இணையம் பயன்படுத்துபவர்களுக்கு சொல்லவே வேண்டம். இணையத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது நொடிக்கொரு முறை வைரஸ்கள் ஆயிரக்கணக்கில் வந்து உங்கள் கணினியைப் பதம் பார்க்க வரிசையில் நிற்கும். அவற்றை தடுத்து, கம்ப்யூட்டரில் இருக்கும் வைரசை நீக்கி, வைரசே இல்லாமல் செய்து, உங்கள் கணினி எந்நிலையில் தற்போது இருக்கிறதோ, அதே நிலையில் காலம் முழுவதும் வைத்திருக்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர் Deep Freeze
இம்மென்பொருளை இங்கு சென்று நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவும்போது மறக்காமல் C:/ வைத் தேர்ந்தெடுத்து நிறுவிக்கொண்டு இம்மென்பொருளுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துவிட்டால் போதும். இனி நீங்கள் நினைத்தால் தவிர, மற்ற எவரும் உங்கள் C:/டிரைவில் கை வைக்க முடியாது.
இம்மென்பொருளை இன்ஸ்டால் செய்து இயக்கிய பிறகு, கணினியை பாதிக்கும் வைரஸ்கள் ஏதும் இருந்தால் கம்ப்யூட்டரில் இருந்து நீக்கிவிடும்.
ஒரு வேளை வைரஸ் வந்தால் கூட மீண்டும் உங்கள் கணினியை Restart செய்யும்போது உங்கள் கணினியின் பழையை நிலையை திரும்ப பெற்றுவிடும்.
புதியதாக தாக்கிய வைரஸ் எதுவும் கணினியில் இருக்காது. இதுதான் இம்மென்பொருளின் சிறப்பம்சம். அதாவது புதிய கணினியில் மென்பொருளை நிறுவும்போது கணினி எந்த நிலையில் இருக்குமோ, அதைப்போன்ற ஒரு நிலைக்கு மீண்டும் கொண்டு வந்துவிடும்.
ஒரு வேளை நீங்கள் C:/ Drive-ல் மாற்றம் செய்ய வேண்டியிருப்பின் System Tray உள்ள Deep Freeze Icon மீது ஷிப்ட் பட்டனை அழுத்தியவாறே டபுள் கிளிக் செய்யுங்கள். இப்போது தோன்றும் விண்டோவில் Status on next boot என்பதில் Boot Thawed என்பதை கிளிக் செய்து Ok கொடுங்கள்.
இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்யுங்கள். கணினி தொடங்கிய பிறகு உங்களுக்கு வேண்டிய மாற்றங்களை C:/ டிரைவில் மேற்கொள்ளலாம். ஏதாவது புதிய மென்பொருள்கள் நிறுவ வேண்டி இருப்பின் இந்த முறையைக் கையாளலாம்.
தேவையான மென்பொருளை நிறுவிவிட்டு மீண்டும் உங்கள் கணினியை பழைய நிலைக்கே கொண்டு வர Status on next boot என்னுமிடத்தில் Boot Frozen என்பதை கொடுத்து ok சேமித்துவிடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்துகொள்ளுங்கள். இனி மீண்டும் Deep Freeze செயல்படத் துவங்கிவிடும். தேவையில்லாமல் உங்கள் கணினியில் மாற்றம் செய்ய நினைப்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் C:/ டிரைவை ஒரு சக்தி மிக்க பாதுகாவலான இருந்து Deep Freeze Software செயல்படும்.
மென்பொருளைத் தரவிறக்க:
தளத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பு (English summary about this software): Deep Freeze by Faronics helps your computer run like new by memorizing your computer’s configuration and performing a full system recovery with every restart.
நன்றி நண்பர்களே.. பதிவைப் பற்றிய கருத்துகளைக் கூட மறக்காதீர்கள்.. !!!
பயனுள்ள தகவல்… நண்பரே நன்றி !
பயனுள்ள பகிர்வு சகோ.!
Your information is very very useful to me….
Thank you…
Your information is very very useful to me….
Thank you…
SIR intha menporul yappati uninstall saivathu yankku trail version than irukku athai yappati full version aaha matruvathu uthavunkal
Usefull
thankyou