Tuesday, December 24, 2024
HomeFree softwareஅனைத்து பிரௌசர்களிலும் PDF கோப்புகளை படிக்க

அனைத்து பிரௌசர்களிலும் PDF கோப்புகளை படிக்க

வணக்கம் நண்பர்களே..! இன்றைய கணினி யுகத்தில் படிக்கும் மாணவர்கள் முதல் பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் மென்பொருள் PDF Reader.இணையம் வழி பாடப்புத்தகங்கள் முதல் மற்ற இலக்கியப் படைப்புகள் வரை அனைத்து இப்போது மின்னூல்களாகப்பட்டு கிடைக்கிறது. கணினி அல்லது மொபைல் மூலம் படிக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. கணினியில் இணைய இணைப்பில் இருந்தவாறே PDF கோப்புகளை படிக்க முடியும். அதற்கு உங்கள் வலை உலவியில் pdf reader plugin நிறுவியிருக்க வேண்டும்.

நீங்கள் பல்வேறு இணைய உலவிகளைப் பயன்படுத்துபவர்களாக இருப்பின் ஒவ்வொரு உலவிக்கும் தனிப்பட்ட முறையில் PDF Reader Plugin நிறுவியிருக்க வேண்டும். பிளகின் போன்றவைகளை உலவியில் நிறுவும்போது உலவியின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு பயனுள்ள வழிமுறை உள்ளது.

இணையத்தில் இருந்தவாறே பி.டி.எப். கோப்புகளைத் திறந்து படிக்க ஒரு மென்பொருள் உங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இணையத்தில் காணும் மின்னூல்களை PDF Reader இல்லாமல் PDF Plugin இல்லாமல் வாசிக்க முடியும். இணைய உலவிகள் எதுவாக இருப்பினும் அதில் பி.டி.எப் கோப்புகளைத்(PDF Files)திறந்து வாசிக்க முடியும்.

மென்பொருளைத் தரவிறக்கச்சுட்டி: http://www.foxitsoftware.com/downloads/

மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு மென்பொருளைத் திறந்து அதில் Tools==>Preference என்பதைக் கிளிக் செய்யுங்கள்.தோன்றும் விண்டோவில் இடது பக்கமுள்ள பட்டியலில் படத்தில் உள்ளதுபோன்று இன்டர்நெட் என்பதை தேர்வு செய்யவும். பிறகு அருகில் இருக்கும் web browser options என்பதில் Display PDF in Browser என்பதில் டிக்மார்கை ஏற்படுத்தவும்.

பிறகு அந்த விண்டோவை மூடிவிடவும்.. அவ்வளவுதான்.. இனி நீங்கள் எந்த ஒரு வலை உலவிப் பயன்படுத்தினாலும், அதில் PDF கோப்புகளைத் திறந்து படிக்க முடியும். அதற்கென தனியாக பிளகின்(Plugin) எதுவும் நிறுவ வேண்டியதில்லை..

மென்பொருளின் பயன்கள்: 

1. இது வேகமாக PDF கோப்புகளைத் திறக்கிறது.
2. முக்கியமான வரிகளை ஹைலைட் செய்யும் வசதி.
3. பொருள் விளங்காத வார்த்தைகளை தெரிவு செய்து அந்த வார்த்தைகளுக்கான சரியான பொருளை இணையத்தில் அறிந்துகொள்ளும் வசதி.
4. கோப்புகளை நம் வசிதிக்கேற்றவாறு அளவை மாற்றிப் பார்க்கும் வசதி.. இன்னும் பல வசதிகளைக் கொண்டுள்ள இந்த மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்துங்கள்.

இம்மென்பொருள் சிறப்பாக இயங்க உங்கள் கணினியில் இருக்க வேண்டியவை:

இயங்குதளம் (Operating System):

Microsoft Windows® XP Home, Professional, or Tablet PC Edition with Service Pack 2 or 3 (32-bit & 64-bit).
Windows Vista® Home Basic, Home Premium, Business, Ultimate, or Enterprise with or without Service Pack 1 (32-bit & 64-bit).
Windows 7 (32-bit & 64-bit).

தேவையான குறைந்த பட்ச வன்பொருள்கள்(Recommended Minimum Hardware for Better Performance):

1.3 GHz or faster processor.
64 MB RAM (Recommended: 128 MB RAM or greater).
52 MB of available hard drive space.
800×600 screen resolution.

 Foxit Reader மென்பொருளைத் தரவிறக்க:

download foxit pdf reader software

நன்றி நண்பர்களே.. பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா?

RELATED ARTICLES

3 COMMENTS

Comments are closed.

Most Popular

Recent Comments