வணக்கம் நண்பர்களே..! இணையத்தில் கூகிள்.காம் நமக்கு கிடைத்திருக்கும் அற்புதமான வரமென்றால்.. கணினியில் Mircosoft ம் நமக்கு கிடைத்திருக்கும் மற்றொரு அற்புதமான பொக்கிஷம்.
இதை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இன்று உலகெங்கும் கணினியில் அனைவரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருப்பதற்கு காரணம் இந்த மைக்ரோசாப்டின் எளிய வடிவமைப்புதான்.. ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் User friedndly யாக கொண்டு வந்ததன் பலன்தான் இன்று படிக்காதவர்கள் கூட கணினி முன்பு அமர்ந்து Browse செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் கற்றுக்கொள்கிறார்கள்.
விஷயத்திற்கு வருவோம்..கணினியில் நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடியது வசதிகள் அனைத்தும் United stats என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் வழிமுறைகளின் அடிப்படையில் அமைந்தது தான் என்பது நமக்குத் தெரியும். கணினியில் உள்ள ஒவ்வொரு வசதியும் இந்நாட்டின் பயன்படுத்தபடும் பழக்கவழக்கங்கள் மற்றும் கல்வி முறைக்களை அடிப்படைகளைக் கொண்டுதான். அதனால் கணனியில் உள்ள குறீயீடுகளனைத்தும் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் குறியீட்டுமுறைகளே டீபால்ட்டாக(Default) இருக்கும்.
இதனை நம நாட்டிற்கு ஏற்ற வாறு மாற்ற வேண்டும். காரணம் நம்முடைய குறியீடுகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கும் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கும். உதாரணமாக நாம் Date பார்மட்டை இப்படி அடிப்போம். முதலில் தேதி, பிறகு மாதம், பிறகு வருடம் என இருக்கும். உதாரணமாக 25/05/2021 இந்த முறையில்தான் நாம் தேதியைக் குறிப்பிடுவோம். ஆனால் அவர்கள் 05/25/2021 எனக் குறிப்பிடுவார்கள்.
முதலில் மாதத்தையும், பிறகு தேதியையும், பிறகு வருடத்தையும் குறிப்பிடுவோம்.
அதேபோல பணத்திற்கு $ என்ற கூறியீட்டை அவர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் நம் இந்தியப் பணக்குறியீடு வேறு.
இப்படிப்பட்ட வேறுபாடுகளில்லாமல், நம்முடைய நாட்டிற்கு தகுந்தமாதிரியான குறீயீட்டு முறைகளை கொண்டுவருவது எப்படி என்பதை இப்பதிவின் ஊடாகப் பார்ப்போம்.
தற்போது விண்டோஸ்7 மற்றும் windows XP தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இவ்விரண்டிலும் மாற்றம் செய்வது குறித்துப் பார்ப்போம். முதலில் Windows – ல் மாற்றம் செய்வது குறித்துப் பார்ப்போம்.
- உங்கள் கணினியில் control panel திறந்து கொள்ளுங்கள்.அதில் Clock, language and Region என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
- தோன்றும் விண்டோவில் additional settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
- அதில் Numbers. Currency, Time , Date என்று நான்கு டேப்கள்(tabs)இருக்கும். ஒவ்வொன்றையும் முறையே கிளிக் செய்து settings மாற்றி அமைக்க வேண்டும்.
- முதலில் உள்ள numbers-என்பதைக் கிளிக் செய்யுங்கள். அதில் digit grouping என்பதில் உள்ள drop down list-ஐ கிளிக் செய்யுங்கள்.
- அதில் இறுதியாக நாம் பயன்படுத்தும் முறையான 12,34,56,789 என்று இருக்கும். அதை click செய்து பிறகு கீழிருக்கும் .apply என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்தது Currency என்ற டேபை கிளிக் செய்யுங்கள். இதில் $ symbolதான் default –ஆக இருக்கும் அதை delete செய்து விட்டு இந்திய ரூபாயின் குறியீட்டை என்று தட்டச்சு செய்துவிடவும். இந்தி குறியீட்டை தட்டச்சு செய்ய இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளவும். குறியீட்டை தட்டச்சு செய்துவிட்டு. கீழிருக்கும் Apply என்பதை கிளிக் செய்துவிடுங்கள்.
- அடுத்தது time என்ற டேப் இருக்கிறதல்லவா? இதில் நீங்கள் settings எதுவும் மாற்ற தேவையில்லை. அதற்கடுத்து date . இந்த டேபிள் click செய்யுங்கள். அதில் short date format என்று இருக்கும். அதில் உள்ள drop down list ஐ கிளிக் செய்து கடைசியில் உள்ள dd/mm/yyyy என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து apply கிளிக் செய்யவும். இப்போது அனைத்தையும் முடித்துவிட்ட பிறகு Ok பட்டனை அழுத்தவும். முடிந்தது. இனி நம் நாட்டிற்கு ஏற்றவாறு குறியீடுகளை உங்கள் கணினியில் மாற்றிவிட்டீர்கள். .
விண்டோஸ் எக்ஸ்பியிலும் கிட்டதட்ட அனைத்து வழிமுறைகளும் ஒன்றாகவேதான் இருக்கும். பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். நன்றி நண்பர்களே..!!!!
பயனுள்ள பகிர்வு நண்பரே .. 🙂
நன்றி நண்பரே..!