நொடியில் உங்கள் புகைப்படங்களுக்கு PHOTO EFFECT கொடுத்திட உதவும் இணையதளங்கள்
அதைப் பயன்படுத்தி போட்டோக்களுக்கு எஃபக்ட் கொடுத்திடலாம். அது மட்டுமில்லாமல் தனியாக போட்டோ எஃபக்ட் செயலிகளைப் பயன்படுத்தியும் போட்டோவினை அழகுபடுத்தலாம்.
ஆனால் அவ்வாறான செயலிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே போட்டோ டிசைன்கள் இருக்கும்.
ஆன்லைன் போட்டோ எடிட்டிங், Photo Effects கொடுத்திட பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. அவற்றில் மிக முக்கியமானதும், அதிக அளவில் போட்டோ எஃபக்ட்களை கொடுக்கக் கூடிய இணையதள கருவி Photofunia.
உங்கள் வீட்டு விசேசங்களில் எடுத்த புகைப்பட ஆல்பங்களைப் பார்த்திருப்பிருப்பீர்கள். அழகாக வடிவமைத்து இருப்பார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் தனிப்பட்ட முறையில் டிசைன் செய்து நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருப்பார்கள்.
உண்மையாகவே நம்முடைய போட்டோ இவ்வளவு அழகா? என்று ஆச்சர்யபடும் அளவிற்கு நேர்த்தியாக டிசைன் செய்திருப்பார்கள். அதுபோன்ற போட்டோ எஃபக்ட்களை நீங்களே யாருடைய துணையுமின்றி செய்திட பயன்படுவதுதான் மேற்குறிப்பிட்ட இணையதளம்.
இதற்காகவே இந்த தளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம் நண்பர்களே.. நமது புகைப்படங்களை நொடியில் விரும்பிய படி அழகூட்டலாம். அனிமேட்(Animation) செய்யலாம். மெருகேற்றலாம்.. தற்பொழுது HD தரத்தில் புகைப்படங்களை மாற்றி டவுன்லோட் செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண புகைப்படத்தை இதில் Uplaod செய்து HD PHOTO வாக மாற்றி பெற முடியும்.
இவ்விணையதளத்தில் கணக்கு தொடங்க வேண்டிய அவசியமில்லை. தளத்தில் நுழைந்தவுடனேயே effect என்ற மெனு பிரிவில் பல வகைகள் கொடுக்கபட்டுள்ளன. அவற்றில் உங்கள் போட்டோவிற்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து, அதில் உள்ள Photo Effect னை கொடுத்திடலாம்.
எப்படி போட்டோ எஃபக்ட் கொடுப்பது?
- எந்தப் படத்தைப் போன்று உங்களுக்கு வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள்.
- பிறகு அதில் Choose Photo என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுடைய கம்ப்யூட்டர்/ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோவினை அப்லோட் செய்து கொள்ளவும்.
(அல்லது அதிலுள்ள ஏதேனும் ஒரு ஆப்சனை பயன்படுத்தி போட்டோவினை அப்லோட் செய்யலாம். உங்களுடைய கம்ப்யூட்டரில் கேமிரா இருந்தால் Camera option ஐ கிளிக் செய்து அதன் மூலம் போட்டோ எடுத்து அப்லோட் செய்யலாம். பேஸ்புக், கூகிள் டிரைவ், ட்விட்டர் போன்றவற்றில் உங்களைய புகைப்படம் ஆன்லைனில் இருந்தால் Online ஆப்சன் தேர்ந்தெடுத்து அதன் மூலம் புகைப்படத்தை அப்லோட் செய்திடலாம். )
- பிறகு Select an area you would like to use என்ற பகுதியில் உங்கள் படத்தை தேவையான அளவு Crop செய்து கொள்ளவும்.
- அதன் பிறகு Go என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் நீங்கள் அப்லோட் செய்த போட்டோ, நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்பட Effect உடன் காட்டும்.
அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம். இன்டர்நெட்டில் (Social Websites) ஷேர் செய்திடலாம்.
நான் அவ்வாறு மாற்றிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு ஒரு சில..!!
thanks friend