Tuesday, November 26, 2024
HomeFree softwarependrive ல் திறக்கமுடியாத பைல்களையும் திறக்க கூடிய இலவச மென்பொருள்

pendrive ல் திறக்கமுடியாத பைல்களையும் திறக்க கூடிய இலவச மென்பொருள்

நாம் அடிக்கடி கணினியில் பயன்படுத்தும் ஒரு (external device) சாதனம் USB என்று சொல்லப்படுகிற பென்டிரைவ்.

இந்த பென்டிரைவின் மூலம் நாம் அதிக தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல்லாம்.. இந்த வசதியைத் தரும் பென்டிரைவ் சில சமயங்களில் படுத்துவதுண்டு. சில சமயம் அதிலுள்ள பைல்களை திறக்க முடியாமல் போகலாம்..அப்படி திறக்க முற்படும்போது பிழை செய்தி(Error message) வரும்.

இந்த சங்கடத்தைத் தீர்க்கவே இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது.. இது முற்றிலும் இலவசம். மேலும் portable version ஆகவும் பெறலாம்..

மென்பொருளை தரவிறக்க இந்த முகவரியை கிளிக் செய்யவும்: http://www.usbalert.nl/usbalert/download.php

மேற்காணும் தளத்தில் சென்று உங்களுக்குத் தேவையான இம்மென்பொருளை நீங்கள் தரவிறக்கி அதை உங்கள் கணினியில் நிறுவிக்க்கொள்ளுங்கள்.. இங்கு போர்ட்டபிள் வெர்சன் என்பதை கிளிக் செய்தும் தறவிரக்கிக்கொள்ளலாம் என்பது ஒரு சிறப்புத் தகவல்.

தரவிறக்கு மென்பொருளை இயக்கியதும் டாஸ்க்பாரில் USB Alert என்ற செய்தி கிடைக்கும்.  நாம் pen Drive-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் USB alert Icon -ஐ கிளிச் செய்து Eject செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீக்கலாம். இந்த முறையில் பென்டிரைவை கணினியில் இருந்து நீக்கினால் பென்டிரைவில் சேமிக்கப்பட்டதகவலும் நல்ல முறையில் இருக்கும்.. நமது பென்டிரைவுக்கும் ஆயுட்கால பாதுகாப்பு கிடைக்கும்..

என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறாதா?  அப்படியெனில் நிச்சயமாய் நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள் என்று நம்புகிறேன்.. பயன்படுத்தி உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நன்றி நண்பர்களே..! மீண்டும் மற்றொரு பதிவின் வழி சந்திப்போம்.!!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments